தூக்கிட்டு சித்ரா தற்கொலை- அதிர்ச்சி தகவல்

தங்கியிருந்த அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு சித்ரா தற்கொலை செய்துகொண்டது தெரிவியவந்துள்ளது.

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா(29).  இவர் இன்று 09.12.20-ம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார்.  தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமந்த்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாக்வும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.

கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து நசரத் பேட்டை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்

இந்த தற்கொலையின் காரணம் என்ன இது முதலில் தற்கொலையா இல்லை திட்ட மிட்ட சதியா என்று காவல் துறை விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து பல காலமாக சின்னத்திரையும் சினிமா திரையும் அப்படி தான் உள்ளது தொடர் தற்கொலைகள் ஏன் யாரும் இதை பற்றி பேசுவது இல்லை ஏன் தற்கொலை செய்கிறார்கள் உளவியல் பிரச்சினையா அல்லது வேறு ஏதோவா தீர விசாரிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *