கலவர பூமியான கராச்சி. சந்தர்ப்பத்திற்காக பரிதவிக்கும் சீனா

இந்தியா உலகம்

மதத்தின் பெயரால் ஒன்று கூடலாம், ஆர்ப்பாட்டம் செய்யலாம், அது கலவரமாக முடியும் என்று தெரிந்தால் கூட, பாகிஸ்தானில் உள்ள சட்டம் கொண்டு அதை தடுக்க முடியாது, காவல் துறை தலையிடக்கூடாது என்கிறது அவர்கள் தேச சட்டம். இதனைத் அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் நன்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பணமதிப்பிழப்பு (Demonetization) நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, பாகிஸ்தான் பொருளாதாரத்தில் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தனி நபர் ஆண்டு வருமானம் குறைந்துகொண்டே வருகிறது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் GDP மைனஸில் செல்ல ஆரம்பித்து மாதங்களுக்கு மேல் ஆகுகிறது.

லாகூரிலும், கராச்சியிலும் கலவரத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கு கொண்டு இருக்கிறார்கள். இதை அரசே முகவர்களை கொண்டு நடத்துகிறதோ என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களின் நோக்கம் எத்தனையோ இருந்தாலும், தங்கள் நாட்டில் இருந்து கொண்டே போராட அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது. எனவே தீவிரவாதிகள் அங்குள்ள ஏழை மக்களை போராட்டத்திற்கு பணம் கொடுத்து அழைத்து வருகின்றனர். நல்லதொரு கூட்டம் கட்டு குலையாமல் இருந்தால் அப்படியே இந்திய எல்லை வரை பூச்சாண்டி காட்டிவிட்டு வரலாம், இதற்கு இன்னமும் அதிகப்படியான பணத்தை சீனாவிடம் இருந்து கறந்து விடலாம் என்பது அவர்களுக்கு நினைப்பு.

சீனாவின் சின்ஜியான் மாகாணத்தில் உள்ள உய்கூர் முஸ்லீம் மக்களை சீன அரசு கொடுமைப்படுத்தி வருகிறது. தற்போது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கலவரத்தினால், சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளி உலகிற்கு தெரியாமல் அடக்கி வைக்க நினைக்கிறது சீனா. மேலும் பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம் பொது மக்களை இந்தியாவிற்கு எதிராக தூண்டிவிட்டு, இந்தியாவிலும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது சீனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *