முதல்வரை எதிர்த்து சிரிப்பு நடிகர்? விருப்ப மனு அளித்ததால் பரபரப்பு

அரசியல் தமிழகம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிட, திமுக சார்பில் சினிமா காமெடி நடிகர் இமான் மனு செய்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு என்பதால், குறுகிய அவகாசமே உள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெற்று வருகின்றன.

அதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்ப மனுவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட மனு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக சார்பிலும் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. இதில், முதல்வர் பழனிச்சாமி போட்டியிடும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட சினிமா காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி என்பவர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். முதல்வரை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்தவே திமுக விரும்பும் என்பதால், காமெடி நடிகர் போட்டியிட திமுக வாய்ப்பு தருமா என்பது சந்தேகம்தான்.

இதற்கிடையே, இதுநாள் வரை அதிமுக கூட்டணியில் இருந்து வந்த நடிகர் சரத்குமாரின் சமத்துவம மக்கள் கட்சி, தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. ஐ.ஜே.கே. கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக, அக்கட்சி தலைவரான நடிகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *