போதை பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு! சிக்கினார் சிவகுமார் இரு மகன்கள் படதின் பிரபல நாயகி.!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இதனை தற்கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்தனர். ஆனால் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து பலர் சந்தேகம் எழுப்பியதை தொடர்ந்து மும்பை போலீசார் இது குறித்த விசாரணையை தொடங்கினர். விசாரணையில் சுஷாந்த் சிங்கை யாரேனும் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் அல்லது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் சுஷாந்த் சிங் தற்கொலை பின்னனியில் திடுக்கிடும் தகவல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்கரவர்த்தி, இவரது சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலர் போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. மேலும், சுஷாந்த் சிங்குக்கு போதைப் பொருட்களை அவர்கள் வழங்கி வந்ததும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், சுஷாந்த் மரண வழக்குடன் தொடர்புடைய போதை பொருள் புகாரில் அண்மையில் சுஷாந்தின் காதலியும் பிரபல பாலிவூட் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நடிகை ரியாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் பயன்படுத்திய பாலிவூட் பிரபலங்களின் பெயர்களை அவர் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.அதில் பிரபல நடிகைகளான ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலி கான், உள்ளிட்டோருக்கு இவ் விவகாரத்தில் தொடர்புள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடிகை ரியா சக்ரபர்த்தி யிடம் நடத்திய Narcotics Control Bureau (NCB) விசாரணையில் அவர் பாலிவுட்டில் பல முன்னணி பிரபலங்களின் பெயர்களை கூறி இருப்பதாக தெரிகிறது, இதில் 25 பாலிவுட் பிரபலங்கள் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என பலரது பெயர்கள் அதில் உள்ளதாக கூறப்படுகிறது.அதில் ராகுல் ப்ரீத் சிங்கின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக மும்பையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

அதனால் NCB விரைவில் ராகுல் ப்ரீத் சிங்கையும் விசாரிக்க முடிவு செய்துள்ளதால், விரைவில் இன்னும் பல மர்ம முடுச்சுகள் அவிழ்க்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது. நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழில் நடிகர் கார்த்திக் ஜோடியாக தீரன், மற்றும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே என நடிகர் சிவகுமார் இரண்டு மகன்களின் படத்தில் கதநாயகியாக நடித்தவர் இன்னும் பல திரைப் படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் தற்கொலையை சில அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துகின்றனர்.! மாணவி தற்கொலை குறித்து பேராசிரியர் கருத்து.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *