உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 11.30 கோடியை தாண்டியுள்ளது.
சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று, பல்வேறு நாடுகளில் பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.30 கோடியை தாண்டி உள்ளது. உலகம் முழுவதும் தற்போது 113,084,852 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை உலகளவில் 88,701,472 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 25 லட்சத்து 07 ஆயிரத்து 768 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 21,875,612 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.