இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கொரோனா தொற்று தலைதூக்கியது

இந்தியா

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 24,882 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 140 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி 2,02,022 பேர் தற்போதைய நோயாளிகளாக உள்ளனர்.

Coimbatore reports first COVID-19 death as man succumbs in hospital- The  New Indian Express

நேற்று வரை மொத்தம் 2 கோடியே 82 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் புதிதாகப் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புனேயில் கடந்த சில நாட்களாகக் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் மார்ச் இறுதிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *