சீனாவில் மீண்டும் தீவிரம் அடையும் கொரோனா வைரஸ்

சீனாவில் புதிதாகத் தீவிரமடைந்துள்ள கொரோனா பரவலால் பாதிக்கப்படுவோருக்காக பெய்ஜிங் அருகே 1,500 அறைகளைக் கொண்ட மருத்துவமனை 5 நாள்களில் அமைக்கப்பட்டுள்ளது.

ஹீபே மாகாணத்தில், அண்மைக் காலமாக கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாங்காங் நகரில் 6,500 அறைகள் கொண்ட 6 மருத்துவமனைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, 1,500 அறைகள் கொண்ட ஒரு மருத்துவமனை கடந்த சனியன்று 5 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *