அமெரிக்காவின் அயோக்கியத்தனம் – கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு வருமா?

இந்தியா உலகம்

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், கொரோனா தொற்று சிகிச்சைக்காக இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி க்ளோரோக்வின் (HCQ) கேட்டிருந்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப். அதற்கு இசைந்து தேவையான HCQவை ஏற்றுமதி செய்துவைத்தது பாரதம். அந்த உதவிக்கு பலமுறை நன்றி சொன்னார் டிரம்ப். சமீபத்தில் (மார்ச் 2021) நான்கு நாடுகள் (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா) Quad கூட்டத்தில் “நம் கூட்டமைப்பு தடுப்பு மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும்” என்று அறிக்கை விட்டது அமெரிக்கா.

ஆனால் தற்போது இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிக்க தேவையான பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்திருக்கிறது அமெரிக்கா. இதன் பின்னணி என்ன என்று நாம் விசாரித்த போது, பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஜோ பைடன் – கமலா ஹாரீஸ் கூட்டணி இந்தியா விரோத மனப்பான்மை கொண்டுள்ளதாக தெரிகிறது.

“தயவு செய்து தடைகளை நீக்குங்கள்” என்று ஜோ பைடனிடம் கேட்டு tweet போட்டிருக்கிறார் கோவிஷீல்ட் தயாரிக்கு சீரம் இன்ஸ்டிட்ட்யூட் CEO ஆதார் பூனாவாலா. அதற்கும் அமெரிக்கா, “ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறது. இது குறித்து இண்டியா டுடே கட்டுரையில், “அமெரிக்காவுடன் பிரதமர் பேசவேண்டும்” என்ற கட்டுரையில்: “சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்டுக்கு இப்போதைக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களது Covovax தடுப்பு மருந்துக்கு எதிர்காலத்தில் பிரச்சினை. அதே வேளையில், பாரத் பயோடெக், தான் தயாரிக்கும் கோவாக்ஸினுக்கு தேவையானவற்றை இந்தியாவிலேயே செய்கிறது” என்று தெரிவிக்கிறது. பிரச்சினை சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு மட்டும் என்று தெரிகிறது.

அமெரிக்க தடுப்பு மருந்து நிறுவனங்கள் இந்த பொருட்களை உபயோகிக்காத போது, அவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய ஏன் தடை? நமக்கு தேவையில்லாதவற்றை ஏற்றுமதி செய்யும் தடையை நீக்க வேண்டும்.” என்று tweet செய்துள்ளார் அமெரிக்க நிருபர் ஜெஃப் .

ஏனிந்த கேப்மாரித்தனம் என்ற கேள்விக்கு பதில் “ஃபைசர் உள்ளிட்ட அமெரிக்க ஃபார்மா லாபி” காரணம். “குறைந்த விலையில் தடுப்பு மருந்து தயாரிக்கும் இந்தியா போன்ற நாடுகளை தண்டிக்க வேண்டும்” என்று ஜோ பைடனை கேட்டுக் கொண்டுள்ளது லாபி. ஃபைசர் இந்த ஆண்டு மட்டும் 21 பில்லியன் டாலர் சம்பாதிக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதை இந்திய தடுப்பு மருந்துகள் (அவற்றின் குறைந்த விலையில் காரணமாக) வீணடித்துவிட்டன” என்கிறது இந்த செய்தி : https://theintercept.com/2021/03/03/vaccine-coronavirus-big-pharma-biden/

நமக்கு உயிரா முக்கியம்? பணம் தான் முக்கியம் என்கிற ஃபைசர் ஃபார்மா லாபியின் அமெரிக்க அடிமை அரசு. ஒரு வேளை அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது என்றே என்ன தோன்றுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *