டெலிவரி பாய் மீது புகார் தெரிவித்த பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு?

இந்தியா உலகம்

பெங்களூருவில் ஜோமேட்டோ நிறுவன டெலிவரி பாய் மீது புகார் தெரிவித்த பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Bangalore Zomato case: Techie cancels food order, delivery boy punches her  | Bengaluru News - Times of India

கடந்த 9 ஆம் தேதி ஹிதேசா சந்திரானி என்ற பெண் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தாமதமாக உணவு கொண்டு வந்தது குறித்து கேட்டதற்கு, ஜோமேட்டோ ஊழியர் தன்னை தாக்கி விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, காமராஜ் என்ற அந்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு காமராஜ் வெளியிட்ட வீடியோவில் அந்த பெண் செருப்பால் தன்னை தாக்கி கடுமையாக பேசியதாகவும், தன்னை தாக்க முயன்ற போது தடுத்ததில் அவரது கை பட்டே மூக்கில் காயமடைந்தார் என்றும் கண்ணீருடன் விளக்கம் அளித்திருந்தார்.

இது குறித்து விசாரித்து வந்த போலீசார் காமராஜை தாக்கியதாக ஹிதேசா சந்திரானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *