ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக

அரசியல்

ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்த கட்சி திமுக என சாடியுள்ளார்.

Image result for stalin mk

ஒவ்வொரு முறை ஆட்சிக்கும் வரும் போதும், விதவிதமாக ஊழல் செய்யும் கட்சி திமுக என்றும், அப்பாவி மக்களின் நிலங்களை ஈவு, இரக்கமின்றி அபகரித்த கட்சி திமுக எனவும் துணை முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக என சாடிய அவர், மக்கள் 23 ஆண்டுகள் திமுகவிற்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்காமல் தண்டித்ததை போல இனியும் தண்டிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *