ஆசை அனைவருக்கும் இருக்கும்.! காயத்திரி ரகுராம் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்.!

திமுகவில் ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தீர்மானம் போடலாம் ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய மக்கள் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,அம்மா மறைந்த பின்பு அதிமுக கலைந்து விடும் என்று திமுக எண்ணியது. ஆனால் கழகத்தை ஆலமரம் போல உருவாக்கி முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.

மக்கள் செல்வாக்கில் நாம் உள்ளோம். மக்களோடு மக்களாக நாம் உள்ளதால் நமது ஓட்டு சிந்தாது, சிதறாது. நமக்கு எதிர்க்கட்சியே திமுக தான். தேர்தல் நேரத்தில் திமுகவை எதிர்கட்சியாக தான் நினைத்து செயல்பட வேண்டும். ஒட்டு உறவு எதுவும் இருக்க கூடாது.கழகத்தினருடன் சேர்ந்து இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள் மக்களிடத்தில் எடுத்து கூறினாலே நாம் வெற்றி பெறுவது நிச்சயம். என தெரிவித்த அமைச்சர்.

பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:- ஒவ்வொரு கட்சியும் தீர்மானம் போடும் போது பில்டப் கொடுப்பது வழக்கம் தான். அதுபோலதான் திமுகவும் ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக தீர்மானித்துள்ளது. இதில் மக்களின் தீர்மானம் தான் முக்கியம். மக்களின் தீர்மானம் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பது தான்.எதிர்க்கட்சி என்றால் நாங்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். செய்யும் எல்லாவற்றையும் தவறு என்று சொல்ல கூடாது.

இன்று நிதி தன்னாட்சியை பற்றி பேசக்கூடிய திமுக தலைவர் ஸ்டாலின் அன்று மத்திய அரசுடன் கூட்டணி வைத்திருந்த போது மக்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறவில்லை. அதிமுக பொதுகுழு கூட்டம் சட்டப்படி முடிவெடுக்கப்பட்டு விரைவில் நடைபெறும். வளர்ந்த மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியின் அளவு குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் வழக்கம்போல் வளர்ந்த மாவட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாங்குகின்ற கடனை வட்டியுடன் திருப்பி செலுத்துகின்ற மாநிலம் தமிழகம் தான், அதனால் ரிசர்வ் வங்கி எப்போதும் போல் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றார். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பாஜக கலை மற்றும் கலாச்சார அணி தலைவர் காயத்திரி ரகுராம் கருத்துக்கு பதில் அளித்த அவர்,பாஜக, கலை மற்றும் கலாச்சார அணி தலைவர் தான் கட்சி தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்றார். ஆசை அனைத்து கட்சியினருக்கு இருக்கும், ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்றார்.

அக்காவுக்கு முக்கிய பதவி வழங்க வேண்டும்.!ஸ்டாலினுக்கு எதிராக தனது ஆதரவாளர்களை தூண்டும் கனிமொழி.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *