தேவேந்திரகுல வேளாளர் அரசாணை – என்ன நடக்கிறது ?…

அரசியல் தமிழகம்

கடந்த பல வருடங்களாக கேட்கப்பட்டு வரும் தேவேந்திர குல வேளாளர் அரசாணை எந்த நிலையில் உள்ளது என்று தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் தங்கராஜ் கூறுகையில்: தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கான பணியை கவனித்து வருகிறது. மத்திய அரசின் சமூக நீதித்துறை ஆர்.ஜி.ஐ க்கு தேவேந்திரகுல வேளாளர் அரசாணை சம்பந்தமான விபரங்களை அனுப்பி ஒப்புதல் கேட்டது. ஆர்.ஜி.ஐ க்கு சில விபரம் தேவைபட்டது. அதை தமிழக அரசிடம் கேட்டு பெற்றுக்கொண்டது.

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை
என்பது G.O இல்லை, முறையான திருத்தம். இது போன்ற நடைமுறை தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்ததில்லை. இதை பற்றிய புரிதல் இல்லாததால் தான் மாநில அரசு தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடும். மத்திய அரசு பட்டியல் வெளியேற்றம் நடைமுறையை செய்யும் என்று பலர் கருத்து சொல்லி வந்தார்கள்.

தமிழக அரசே மத்திய அரசிற்கு தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கான பரிந்துரை கடிதத்தை அனுப்பிய பிறகு தான்
பலருக்கும் இதற்கான நடைமுறை புரிந்தது. சட்டதிருத்தம் செய்வதால் ஆர்.ஜி.ஐ கேட்கும் விபரங்களை தமிழக கொடுக்க வேண்டும்.அதை ஆர்.ஜி.ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆர்.ஜி.ஐ பரிந்துரை கொடுத்த பிறகு தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடுவதற்கான நடைமுறையை
மத்திய அரசின் சமூக நீதி துறை தொடங்கும்.
இதற்கான அனைத்து விஷயங்களையும்
சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடந்து வருகிறது.

இதைப் பற்றிய விபரங்களை மனுதாரர் என்ற முறையில் நான் அறிந்த விஷயத்தை மக்களுக்கு தெரியபடுத்தி வருகிறேன். அரசியல் கட்சியில் இருப்பவர்கள், சமுதாய அமைப்பை வழிநடத்துபவர்கள் தங்கள் அமைப்பின் தொண்டர்களுக்கு வழிகாட்டி அழைத்து செல்கிறார்கள். தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வேண்டும் என்பதில் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கிறோம். அந்தந்த அமைப்பிற்கு உட்பட்டே எல்லோரும் செயல்படுகிறார்கள்.

இதனால் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை சார்ந்த விஷயத்திற்கு எனக்கு தெரிந்த விபரத்தை பகிர்ந்து கொள்கிறேன். இதே போல் அவர்களை சார்ந்தவர்களுக்கு தகவலை தந்து வழிநடத்த வேண்டும். எல்லா அமைப்பையும் இணைத்து கூட்டமைப்பு எதையும் தங்கராஜ் உருவாக்கவில்லை. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் நம்முடைய இலக்கை மிக எளிதாக அடைய முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *