தேவேந்திரகுல வேளாளர்
அரசாணை, மக்கள் இயக்கமாக மாறியதால் சமுதாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் ம.தங்கராஜ் கூறியுள்ளார்.
அதில் முக்கியமானவை: அம்பேத்கார் படத்தை பயன்படுத்துவதை பலரும் தவிர்த்து வருகின்றனர். தலித் குறியீடு அடையாளத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
“தேவேந்திரகுல வேளாளர்” என்று அனைத்து சாதிகளையும், அரசியல் கட்சிகளையும், ஊடகத்தையும் உரையாட வைத்துள்ளோம். சலுகை கேட்பதே தவறு என்று உரையாடத்
தொடங்கியுள்ளோம். சாதிகளை மானுடவியலாக பார்க்க வேண்டும் என்பதை அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், பொது
சமுதாயத்திற்கும் புரிய வைத்துள்ளோம்.
எஸ்.சி தொகுதியில் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை தாண்டி, பொது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற பார்வையுடன் உரையாட தொடங்கியுள்ளோம். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து வெளியேறி வருகிறோம். எஸ்.சி/எஸ்டி சங்கத்தில் உறுப்பினராக இருக்ககூடாது என்ற முடிவை எடுத்து தேவேந்திரகுல வேளாளர் அரசு ஊழியர் சங்கமாக செயல்படத் தொடங்கியுள்ளோம்.
பொது அரசியல் கட்சிகள் சமுதாயத்தை புறக்கணித்ததால், சாதிய அரசியல் கட்சி தான் சமுதாயத்தை பாதுகாக்கும் என்ற பார்வையுடன் இருந்தோம். இன்று பொது அரசியல் கட்சிகள் “தேவேந்திரகுல வேளாளர்” அரசாணைக்கு ஆதரவாக முன் நிற்பதை பார்த்த சமுதாயம், பொது அரசியல் கட்சிகளை ஆதரிக்க தொடங்கியுள்ளது. “தேவேந்திரகுல வேளாளர் அரசாணை” தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கப் போகிறது.
தேவேந்திரகுல வேளாளர் அரசாணையே பட்டியலில் நாம் இல்லை என்ற மனநிலைக்கு வர அடித்தளமாகும். “தேவேந்திரகுல வேளாளர் பண்பாட்டு” மேல் எழுந்து நிற்பதால், இச் சமுதாயத்தின் வளர்ச்சியை யாரும் தடுத்து விட முடியாது, என தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் ம.தங்கராஜ் தெரிவித்தார். மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அது சட்டவடிவம் பெறும் என தமக்கு நம்பிக்கை இருப்பதாக கூறினார்.