வட சென்னை 2 பற்றி மூன்று வருடம் கழித்து வாய் திறந்த வெற்றிமாறன்..

சினிமா

2018 ஆம் ஆண்டு தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வடசென்னை. இளம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக அப்போதே வெற்றிமாறன் கூறியிருந்தார்.

Dhanush's official clarification on Vada Chennai 2 - Tamil News -  IndiaGlitz.com

ஆனால் அதன்பிறகு மூன்று வருடங்கள் ஆகியும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய எந்தப் பேச்சும் வரவில்லை. வெற்றிமாறனும் அடுத்தடுத்து வேறு வேறு படங்களில் பிசியாகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு சென்ற வெற்றிமாறன் அங்கு வடசென்னை 2 உருவாக குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தனுஷ் ரசிகர்களின் தலையில் இடியை போட்டது போல் ஆகிவிட்டது. வடசென்னை படத்தை தயாரித்தவர் தனுஷ் தான். ஒருகட்டத்தில் தொடர்ந்து படங்கள் தயாரித்து வந்த தனுஷ் தன்னுடைய மாமனார் ரஜினிகாந்தின் காலா படத்தை தயாரித்து பல நஷ்டங்களுக்கு ஆளானதால் சொந்த படம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை அதன்பிறகு வேறு வேறு கம்பெனிகளில் நடித்து தன்னுடைய கடனை கட்டி விட்டு மீண்டும் பணம் சேர்த்துக் கொண்டிருக்கும் தனுஷ் குறைந்தது இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துதான் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவுள்ளாராம்.

தன்னுடைய பேனரில் வடசென்னை 2 படம் வர வேண்டும் என்பதில் தனுஷ் உறுதியாக இருப்பதால் தான் வடசென்னை 2 படம் வர லேட் ஆகிறது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதுமட்டுமில்லாமல் வடசென்னை 2 படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட் வேண்டும் என சில வருடங்களுக்கு முன்பே வெற்றிமாறன் கூறியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

வெற்றிமாறன் அடுத்தடுத்து சூரி படம், சூர்யா படம் மற்றும் தளபதி விஜய்யுடன் ஒரு படம் என தொடர்ந்து அடுத்த சில வருடங்களுக்கு பிஸியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *