ஹாலிவுட் படப்பிடிப்புக்கு அமெரிக்கா பறந்த தனுஷ்!

சினிமா தமிழகம்

தனுஷ் நேற்று இரவு விமான நிலையத்தில் காத்திருந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ (அவெஞ்சர்ஸ் புகழ்) இயக்கும் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார் தனுஷ். அதோடு அவர் தனது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றுள்ளார்.

தனுஷ் கடந்த சில மாதங்களாக படு பிஸியாக இருக்கிறார். அதனால் தனது குடும்பத்துடன் அவரால் நேரம் செலவிட முடியவில்லையாம். அதனால் மனைவி ஐஸ்வர்யாவையும் அவர்களது இரண்டு குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் நான்கு பேரும் அதிகாலை 2 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டனர். முதலில் துபாயை அடைந்து பின்னர், அமெரிக்காவை இணைக்கும் விமானத்தில் செல்வார்கள். ஐஸ்வர்யா, யாத்ரா மற்றும் லிங்கா சில வாரங்கள் அங்கு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for dhanush IN AIRPORT

ஹாலிவுட் படமான ‘க்ரே மேன்’ படத்தில் ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோருடன் திரையைப் பகிர்ந்துக் கொள்கிறார் தனுஷ். “மே மாதத்திற்குள் கார்த்திக் நரேனின் படத்திற்கான படப்பிடிப்புக்கு தனுஷ் சென்னை திரும்புவதற்கான யோசனை இருந்தது, ஆனால் அமெரிக்க அட்டவணை மேலும் நீட்டிக்கப்படலாம். அதனால் தனுஷ் மூன்று மாதங்கள் அமெரிக்காவில் இருக்க நேரிடும். அவர் திரும்பி வந்ததும், செல்வரகவன் படத்திற்கான வேலைகளைத் தொடங்குவார். பின்னர் கார்த்திக்கின் அடுத்த ஷெட்யூலில் சேருவார். இருப்பினும், சில வாரங்களுக்குப் பிறகுதான் எங்களுக்கு தெளிவு கிடைக்கும்” என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *