சூர்யா சொல்லிட்டாரா ? உடனே இதை செய்யுங்கள்…சூர்யாவை கிண்டல் செய்து H.ராஜா நக்கல்.! கதறும் சூர்யா ரசிகர்கள்.!

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை உற்சாகமாக எழுதி வந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா வெளியிட்ட கருத்து மக்கள் மத்தியில் எடுபடவில்லை, சூர்யாவின் கருத்துக்கு திமுக போன்ற நீட்டை எதிர்த்து அரசியல் செய்து வரும் கட்சிகள் ஆதரித்து வந்தாலும், நீட் தேர்வை எதிர்கொண்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இவர்களின் நீட் எதிர்ப்பு அரசியலை கண்டுகொள்ளவில்லை, மாறாக நீட் நன்மைகள் பற்றி தொடர்ந்து தொலைக்காட்சியில் பேட்டி அளித்திருந்தது, சூர்யா போன்ற நீட் எதிர்ப்பு போராளிகள் மூஞ்சில் கறியை பூசியது போன்று அமைந்தது.

இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் , பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் இது குறித்து கூறுகையில், பொன்மகள் வந்தால் திரைப்படம் வெளியாகும் நேரத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் பற்றி ஜோதிகா பேசி விளம்பரம் தேடினர், அதே போன்று சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நேரத்தில் தற்போது நீட் குறித்து பேசி விளம்பரம் தேட முயற்சிக்கிறார் சூர்யா என தெரிவித்த காயத்ரி ரகுராம்.

மேலும் நடிகர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் தங்கள் நடிகர்களை கொண்டாட கட் அவுட் வைக்கும் போது பலர் கட் அவுட் அவர்கள் மேல் விழுந்து இறந்துள்ளார்கள், இதற்காக திரைப்படங்களை தடை செய்ய முடியுமா.? என கேள்வி எழுப்பிய காயத்திரி ரகுராம், மேலும் தினமும் நோயாளிகளை எதிர்கொள்ள கூடிய மருத்துவ படிப்புக்கு தயாராகும் மாணவர்களை தைரியமாக எதிர்கொள்ள ஊக்குவிக்கும் விதத்தில் தான் இது போன்ற தேர்வுகள் அமைந்துள்ளதாக தெரிவித்த காயத்ரி ரகுராம்.

மேலும் ராமநாதபுரம் இளைஞர் அருண்குமார் படுகொலை செய்யப்பட்டபோதும், சிவனடியார் சரவணன் போலீசார் அடித்து துன்புறுத்தப்பட்டு அவமானம் தங்க முடியாமல் தற்கொலை செய்த போதும் எங்கே சென்றர் நடிகர் சூர்யா, ஒவ்வொரு விவகாரத்தையும் தேர்ந்தெடுத்து கருத்து தெரிவிப்பது, தனது திரைப்படம் வெளியாகும் நேரத்தில் இது போன்று சர்ச்சையை ஏற்படுத்துவது, சூர்யா தனது திரைப்படத்தை விளம்பரம் செய்யும் யுக்தி என சரமாரியாக வெளுத்து வாங்கினார் காயத்ரி ரகுராம். இதே போன்று பாஜக தேசிய செயலாளர் H.ராஜா தனது டிவீட்டர் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில்,

நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்,இதனால் இந்தியாவில் ஆட்சி கவிழ வாய்ப்பு இருக்குனு தமிழக ஊடகங்கள் தெரிவிக்கிறது என அதிகாரிகள் பிரதமர் மோடி அவர்களிடம் கூறுவது போன்றும், இதற்கு பிரதமர் மோடி சூர்யாவே சொல்லிட்டாரா.? உடனே NEET,UPSC, CAT,IIT-JEE, இப்படி என்னென்ன போட்டி தேர்வு இருக்கிறதோ, எல்லாத்தையும் தடை செஞ்சிருங்க, சூர்யா யார கை காட்றாரோ அவங்களையே டாக்டர், IAS, IPS, IFS போஸ்ட்ல உட்கார வைங்க என மோடி கூறுவது போன்று நடிகர் சூர்யாவை நக்கல் செய்து மீம்ஸ் ஒன்றை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் H.ராஜா.

கருவாடு எப்படி மீன் ஆகாதோ அதேபோல்….! முக ஸ்டாலினை செம்ம கலாய் கலாய்த்த செல்லூர் ராஜு.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *