கூட்டணி குழப்பங்கள் – தலை கவிழும் திமுக

அரசியல் இந்தியா

தொகுதிப் பங்கீட்டை அதிமுக சற்றேறக்குறைய சுமூகமாகவே முடித்துவிட்டது.  பாமக, பாஜக, தமாகா தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது.  கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக வழக்கம்போல இழுபறியில் உள்ளது.  இதன்பிறகு சிறு கட்சிகளுக்கு ஒரு சில இடங்கள் ஒதுக்கப்படலாம்.  சசிகலாவுடன் நேரடியாக எந்த ஒரு உடன்படிக்கையும் எட்டப்படாத சூழ்நிலையில், சசிகலா ஆதரவாளர்களில் 10 முதல் 15 நபர்களுக்கு இரட்டை இலையில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.  

Congress-DMK talks hit impasse, Cong miffed with DMK offer of 18 seats |  The News Minute

திமுக கூட்டணியை பொருத்தவரையில் காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுவது போன்ற தோற்றம் வெளிப்படையாக தென்படுகிறது.  காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று கண்ணீரும் கம்பலையுமாக கே எஸ் அழகிரி பேசிய விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Congress can quit the alliance,' says veteran DMK leader Durai Murugan -  The Week

  எப்படியாவது இந்த தேர்தலை வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ள திமுக, பீகாரை சேர்ந்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சொல்லும் யோசனைகள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறது.இதனடிப்படையில்தான் காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைவர்களைக் கூட திமுக அவமரியாதையுடன் நடத்துவதாக தெரிகிறது.  குறைந்த தொகுதிகளுடன் அவமரியாதையையும் சேர்ந்து சகித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.  அரசியலில் மான-அவமானங்கள் பெரிது படுத்தப் படுவதில்லை.  இந்துப் பெண்கள் அனைவரையும் பலமுறை கொச்சைப்படுத்தி பேசிய, நாடக காதல் புகழ், சரக்கு மிடுக்கு புகழ், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடுக்கும் மரியாதையை கூட காங்கிரஸ் கட்சிக்கு திமுக தரவில்லை என்பது உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.தமிழக மக்களைப் பொறுத்தவரையில் கடந்த 10 ஆண்டுகளாக மின்வெட்டு என்பது பெரிய அளவில் இல்லை.  திமுக ஆட்சிக்கு வந்து விட்டால், இன்வெர்ட்டர் வாங்கியே ஆகவேண்டும் என்றுதமிழக மக்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள்.எதிர்க்கட்சியில் இருக்கும் சமயத்தில் கூட திமுக உடன் பிறப்புகள் காவல்துறையையும் அரசு அதிகாரிகளையும் மிரட்டும் செயல் பொதுமக்களை சிந்திக்க வைத்துள்ளது.  சிறிய அளவில் உள்ள கழக உடன்பிறப்புகள் கூட கடைகளில் காசு கொடுக்காமல் பாக்ஸிங் செய்வது திமுகவுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.பிளாட்பாரம் வியாபாரிகள் கூட, திமுக ஆட்சி வந்து விட்டால், நாங்கள் தொழில் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே பேசுகின்றனர்.தமிழ் கடவுளான முருகப் பெருமானையும் கந்தர் சஷ்டி கவசத்தையும் இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு பின்னணியில் இருந்து திமுக உடன் பிறப்புகள் செயல்படுவதாக கூறப்படுவதால்  இந்து மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள், திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர்.இந்த முறை திமுக தோற்று விட்டால் இந்து மதத்தை எந்த ஒரு அரசியல் கட்சியும் இழிவுபடுத்திப் பேச மாட்டார்கள் என்ற கருத்தை, பெரும்பாலான இந்துக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.  இந்த சூழ்நிலையில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.ஏற்கனவே 10 ஆண்டுகளாக திமுக எதிர்க்கட்சியில் உள்ளது., இம்முறையும் தோற்றுவிட்டால் திமுக மீண்டும் தலை எடுப்பது என்பது இயலாத காரியம் என்கிறார் அரசியல் நோக்கர் ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *