பராசக்தி பார்த்து அரசியல் பேசிய திமுக, இன்று ஷகீலாவை பார்த்து அரசியல் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா ஸ்டாலின் தலைமை.?

தனது திரைக்கதை வசனத்தின் மூலம் தனது தொண்டர்களை வசப்படுத்தியவர் கருணாநிதி. அவர் வசனம் எழுதிய பராசக்தி, பூம்புகார், மந்திரகுமாரி, மற்றும் மருத நாட்டு இளவரசி போன்ற திரைப்படங்களில் எழுதிய திரைக்கதை வசனத்தில் அரசியல் கருத்துக்களையும், கொள்கைகளையும் எடுத்துரைத்தவர் கருணாநிதி. எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களில் அவர் அங்கம் வகித்த திமுக கட்சியையும், அவர் ஏற்றுக் கொண்ட தலைவர் அண்ணாத்துரையையும் தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.

காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, திமுக முதன் முதலில் தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்க எம்ஜிஆர் நடித்த திரைப்படங்கள் தான் காரணம். இது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட ஓன்று. தனது திரைப்பட பாடல்களில்: நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும், மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும், நம் தோள்வலியால் அந்த நாள் வரலாம், அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம், விரைவில் திமுக ஆட்சி அமைக்கும் காலம் வரலாம் அன்று, அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம் என எம்ஜிஆர் தனது திரைப்படப் பாடல்கள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் புரட்சியை உருவாக்கினார்.

கருப்பென்றும், சிவப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல், எல்லோரும் ஒற்றுமையாய், பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி, உழைத்தால் பெருகாதோ சாகுபடி, இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி,
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி, பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி, அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி, என திரைப்படப் பாடல்கள் மூலம் திமுக கட்சியின் கொடியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் எம்ஜிஆர்.

இப்படி திரைக்கதை வசனத்தின் மூலம் கருணாநிதியையும், தனது தத்துவ பாடல்கள் மூலம் எம்ஜிஆர் அவர்கள் வளர்த்த திமுக கட்சி, தற்போது ஷகீலாவின் படத்தை பார்த்து கட்சியை வளர்க்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதா? என்று விமர்சனம் எழுந்துள்ளது. இதற்குக் காரணம் திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர், ஷகீலா திரைப்படத்தை குறிப்பிட்டு அரசியல் பேசியது தான், திமுக இந்த சர்ச்சையில் சிக்கியதற்கு காரணம்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன்: பராசக்தி படம் பார்த்து திமுகவினர் அரசியல் பேசியது அந்தக் காலம், ஷகீலா படம் பார்த்து திமுகவினர் அரசியல் பேசுவது இந்தக் காலம். என்றும், ஸ்டாலின் தலைமையின் தரம் தெரிகிறது, என தனது டிவீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் ஸ்ரீநிவாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *