அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படாததால் எப்போது வேண்டுமானாலும் அந்த கூட்டணி உடையலாம் எனவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னதான் சுற்றுபயணம் செய்தாலும் தமிழகத்தில் ராகுல் காந்தியால் ஒன்றும் செய்ய முடியாது என விமர்சித்தார்.
