காயத்ரி ரகுராம் பற்றி ஆபாசமாக அவதூறு பரப்பிய திமுக ஐடி விங் நிர்வாகி.!ஆபாச கூடாரமா திமுக ஐடி பிரிவு.?

உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த திமுக ஐடி பிரிவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் இவர் தொடர்ந்து பொது வாழ்வில் ஈடுபடும் பெண்களை இழிவாகவும் ஆபாசமாகவும் பதிவு செய்து வருகின்றவர். தொடர்ந்து இது போன்று பலமுறை செயல்பட்டு பெரும் சர்ச்சையில் சிக்கிய இவர் மீது, திமுக கட்சியில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை, இதனாலயே இவரின் அநாகரிகமான செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

திமுக ஐடி பிரிவு செயலாளர் PTR தியாகராஜன் தலைமையின் கீழ் இயங்கும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பெரும்பாலும் தொடர்ந்து இதே போன்று செயல்பட்டு வருவதை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடியும், திமுக ஐடி பிரிவை சேர்ந்தவர்கள் திமுக சாதனைகள் மற்றும் அவர்கள் தலைவர் முக ஸ்டாலின் பற்றிய நல்ல செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சிக்காமல் திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் பெண் அரசியல் தலைவர்கள் பற்றி ஆபாசமாக சித்தரித்து கருத்து தெரிவித்து வருவது தமிழக பெண்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மேலும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள திமுக ஐடி பிரிவு நிர்வாகி ஜெயச்சந்திரன் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் முன்னனி திமுக தலைவர்களுடன் வலம் வரும் புகைப்படம் அவரின் சமூக வலைதளத்தில் உள்ளது, திமுக முன்னணி தலைவர்களிடம் நெருக்கமாக இருக்கும் இவர் நேற்று தனது டிவீட்டர் பக்கத்தில் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் குறித்து ஆபாசமா வார்த்தைகளால் மிக கீழ்த்தரமாக வாசகம் அச்சிடப்பட்ட டீசர்ட் ஒன்றை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இதற்கு அணைத்து தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக பெண்கள் மத்தியில் திமுகவுக்கு எதிராக கண்டன குரல் எழுந்தது இதனை தொடர்ந்து திமுக ஐடி விங் நிர்வாகியின் இந்த பதிவுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்கள் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய முடிவு செய்து, அதர்க்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர், பெண்களை இழிவு செய்யும் நோக்கில் கீழ்த்தரமாக பதிவு செய்த திமுக ஐடி பிரிவை சேர்ந்த ஜெயசந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்படும் தகவலை சமூக வலைதளம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்தல் கைது செய்யப்படுவோம் என அஞ்சிய ஜெயச்சந்திரன் பெண்களை இழிவு செய்த அந்த சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டு ஓட்டம் எடுத்தார். ஆனால் பாஜக வழக்கறிஞர் பிரிவு இது தொடர்பாக விரைவில் வழக்கு பதிவு செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய ஆபாசமாக தொடர்ந்து பதிவு செய்து வரும் திமுக ஐடி பிரிவை சேர்ந்த ஜெயச்சந்திரன் மீது இனிமேலாவது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா? என அனைவரும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

முரசொலி மாறன் விதைத்த விஷ விதை விருட்சமாக வளர்ந்துள்ளது.!விவசாயிகளின் முதுகில் குத்திய கட்சி திமுக.! அமைச்சர் தாக்கு.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *