மைனர் பெண்ணை கடத்திய திமுக ஐடி பிரிவு நிர்வாகி போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைப்பு.!

திருப்பத்தூர் மாவட்டம் அருகே, திமுக ஐடி விங் நிர்வாகி இரண்டாவது முறையாக போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார், திமுக ஐடி விங் செயலாளர் PTR தியகராஜன் தலைமையின் கீழ் இயங்கும் ஐடி பிரிவு நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு சிறை செல்வது தொடர் கதையாகி வருகிறது, அமெரிக்காவில் படித்து அங்கேயே தொழில் செய்ததாகவும், தனது குடும்ப பாரம்பரியம் பற்றியும் அடிக்கடி தம்பட்டம் அடிக்கும் PTR தியாகராஜன், திமுக ஐடி பிரிவை ஒழுக்கத்துடன் வழி நடத்த தவறி விட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

கந்தசஷ்டி கவசத்தை இழிவு செய்த கறுப்பர் கூட்டத்தின் முக்கிய நபரான திமுக ஐடி பிரிவில் பணியாற்றிய செந்தில் வாசன் திமுக திமுக ஐடி விங் செயலாளர் PTR தியகராஜன் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் பல வெளியாகி கறுப்பர் கூட்டம் பின்னனியில் திமுகவுக்கு உள்ள தொடர்பு அம்பலமாகி மக்கள் மத்தியில் திமுகவுக்கு மிக பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி கொடுத்த நிலையில், தற்போது திமுக ஐடி பிரிவை சேர்ந்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே பொன்னுசாமி மகன் அஜித் இவர் PTR தியாகராஜன் தலைமையில் கீழ் இயங்கும் திமுக ஐடி பிரிவு ஊராட்சி அமைப்பாளராக பணியாற்றி வருகிறார், இவர் கடந்த மாதம் மைனர் பெண்ணை கடத்திய தொடர்பாக வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், இந்நிலையில் சில தினகளுக்கு முன் ஜாமினில் வெளிவந்த திமுக ஐடி பிரிவை சேர்ந்த அஜித்.

அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 17 வயது மதிக்க தக்க பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்தும், மேலும் தன்னுடன் இணைத்து அந்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார், மேலும் அந்த பெண்ணுக்கு ஆபாச விடீயோக்களை அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார், இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் தரப்பில் இருந்து அஜித்தை தட்டி கேட்ட போது அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் திமுக ஐடி பிரிவு நிர்வாகி அஜித்.

இதனை தொடர்ந்து அவர் மீது போலீசில் புகார் கொடுக்க பட்டத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், திமுக ஐடி பிரிவு நிர்வாகி அஜித் மீது போக்ஸோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய வழக்கின் கீழ் வேலூர் சிறையில் அடைத்தனர், பெண்கள் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் திமுக ஐடி பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் பல பட்ட படிப்பு படித்த PTR தியாகராஜன் தலைமையிலான ஐடி பிரிவில் ஆபாசமாக புகைப்படங்களை சித்தரிப்பது எப்படி? என்பது பற்றி பாடம் நடத்த படுகிறதா.? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை IPS விடுத்த சவாலை ஏற்று சின்னாபின்னமாக தயாராகும் திமுக எம்பி செந்தில்குமார்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *