அண்ணாமலை IPS விடுத்த சவாலை ஏற்று சின்னாபின்னமாக தயாராகும் திமுக எம்பி செந்தில்குமார்.!

பாஜக துணை தலைவர் அண்ணாமலை IPS சமீபத்தில் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் மும்மொழி கொள்கையை எதிர்க்கும் திமுக தலைவர்களுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என சவால் விடுத்திருந்தார், இதற்கு திமுக தர்மபுரி எம்பி செந்தில் குமார், பாஜக துணை தலைவர் அண்ணாமலை IPS அவர்களின் அழைப்பை ஏற்று அவருடன நேரடியாக விவாதிக்க நான் தயார். அது நேரலை நிகழ்ச்சியாக ஏதேனும் ஒரு தமிழக ஊடங்கம் ஏற்பாடு செய்தால் வரவேற்கிறேன் என தெரிவித்தவர்.

விவாத நிகச்சியில் பங்கு பெற நான் தயார், என அண்ணாமலை IPS சவாலை ஏற்ற திமுக எம்பி செந்தில் குமார், மேலும் அண்ணாமலை சவாலை பூர்த்தி செய்ய தமிழக ஊடகங்கள் முன் வரவேண்டும் என செந்திகுமார் எம்பி கேட்டு கொண்டார், இதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை IPS தெரிவித்ததாவது, நடுநிலையான ஊடகம் இந்த விவாதத்தை முன்னெடுத்து நடத்தினால் திமுக எம்பி செந்தில்குமார் உடன் நான் விவாதத்திற்கு தயார் என்று தெரிவித்தவர்.

மேலும் விவாத நிகழ்ச்சி கண்ணியத்துடன் இருக்கவேண்டும், அப்படி கண்ணியத்துடன் விவாதம் நடத்த கூடிய நெறியாளர் ஒருவர் தேவை என்றும், அதற்காக காத்திருப்பதாக அண்ணாமலை IPS தெரிவித்திருந்தார், இதற்கு திமுக எம்பி செந்தில் குமார்,இந்த விவாதம் தொடர்பாக ஏற்கனவே நான்கு ஊடகங்கள் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் அதற்கு நான் அவர்களிடம், முதலில் அண்ணாமலை IPS ஒப்புதலை பெற கேட்டுக்கொண்டேன்.

மேலும் எனக்கு உங்களுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த எந்த பிரச்சினையும் இல்லை. உங்கள் விருப்பம். அது நேரலையில் இருக்க வேண்டும். உங்களுடன் நடக்கும் விவாதத்தில் கண்ணியமான முறையில் கண்ணியமான விவாதம் நடக்கும் என்று எனது தரப்பில் இருந்து நான் உறுதி அளிக்கின்றேன், நீங்களும் அதே உறுதியை அளித்தால் அந்த விவாத நிகழ்ச்சிக்கு மதிப்பீடு செய்ய நெறியாளர் தேவை இல்லை என செந்தி குமார் தெரிவித்தார்.

இதற்கு அண்ணாமலை IPS, நிச்சயமாக கண்ணியத்துடன் விவாத நிகழ்ச்சி நடக்க நான் உறுதி அளிக்கின்றேன், உங்களுடன் பேசிய ஒரு ஊடகம் என்னை அணுகி பேசியுள்ளது, அவர்களிடம் என்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளேன் இனிமேல் தேவையான அணைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் செய்வார்கள் என அண்ணாமலை IPS தெரிவித்ததை தொடர்ந்து விவாத நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்படும் நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதியை கட்டாயப்படுத்திய கனிமொழி.! வேறு ஒருவரை சிக்க வைத்து தப்பித்து கொண்ட விஜய சேதுபதி.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *