திமுக ஒரு கார்ப்பரேட் கிரிமினல்

அரசியல்

சமீபத்தில்  தமிழகத்தில் இரு கழகத்தின் தலைவர்கள்  தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். தடுப்பூசி எல்லோரும் போடுவதுதானே, அதில் சுவாரசியம் ஒன்றுமில்லை என்று நினைக்க தோணலாம். ஆம் சுவாரசியம் இல்லை, ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட இடம் இங்கு உற்றுநோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.உண்மை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்விளம்பரம் காவேரி கார்ப்பரேட் மருத்துவமனையில்.

We are driven by a desire to deliver the best to the people: MK Stalin -  Interview News - Issue Date: Feb 22, 2021

முதல்வர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொண்டதால், பணமில்லாத ஏழைகளும்  நம் முதல்வரே அரசாங்க மருத்துவமனையில் போட்டு கொண்டிருக்கிறார்! நாமும் போட்டுக் கொள்வோம் என்ற விழிப்புணர்வை எளிய முறையில் மக்கள் மனதில் விதைத்திருக்கிறார்.  இதை தாண்டி தடுப்பூசி பற்றிய நம்பிக்கையையும் அவர்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்கிறார் அவர்.  தனக்கு தெரிந்த அரசியல் அனுபவத்தை அறிவை பயன்படுத்தி தன்னைத்தானே மெருகேற்றி வருகிறார்.   இத்தகு நிலைக்கு எத்தகு  பின்புலத்தையும் பயன்படுத்தவில்லை. அதற்காக பல நூறு கோடிகளையும் செலவழிக்கவில்லை. மக்கள்  முதல்வர் ஆயிற்றே! இராசியும் இவருக்கு அதிகமுண்டு.இவரது ஆட்சியில் மழைக்கும் பஞ்சமில்லை. இதேபோல்  இவரது வெள்ளந்தி புன்னகை பயணங்கள் தொடரட்டும்.கொரோனா தடுப்பூசியில்  பாரதம் உலகிற்கு   பெரிய பங்களிப்பை  வழங்கி வருகிறது.  இது நிதர்சனமான உண்மை.  பாரதத்தின் தனித்துவமே இதுதான்! வையகமே  வீடாக கருதுகின்ற மனோபாவம்  இம் மண்ணிற்குண்டான சிந்தை ஆகும்.ஆனால்  வெறும் அரசியலுக்காக தாய்நாட்டை  விட்டு கொடுக்கும் கூட்டங்களை என்னவென்று சொல்வது.   நாங்கள் எலிகளா எங்களை பரிசோதிக்க என்று கேள்வி எழுப்பிய பெருந்தகைகள் தான் இன்று தடுப்பூசியை மலர்ந்த  முகத்துடன் போட்டு கொள்கிறார்கள்.  அதில் விளம்பரமும் தேடிக் கொள்கிறார்கள். தடுப்பூசியின் சாதனையால் உலகத்தின்  பாராட்டு மழையில்  பாரதம் நனைந்து கொண்டுதான் இருக்கிறது.  கண்ணடி பட கூடாதல்லவா, சில திருஷ்டியும்   எதிர்மறை விமர்சனங்களால் மறைந்து போகட்டும். எங்களுங்கு பாரதம் தாய் ஆயிற்றே!  தாய்க்கு கண்ணடி பட்டால் புதல்வர்களுக்கு வருத்தம் தானே.  ஆனால் இத்தனை தடைகளையும்  துச்சமென நினைத்து, அவற்றை  கடந்து பாரதம் கம்பீரமாக நிற்கிறது  நல்ல தலைமையினால்.திமுக தலைவர் மு க ஸ்டாலின் தடுப்பூசி போட்டுக் கொண்டது காவேரி மருத்துவமனை.  இது ஒரு கார்ப்பரேட் மருத்துவமனை.  கார்ப்பரேட்களுக்கு எதிரானவர்கள் என்று மேடைப்பேச்சுகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் கட்சியின் உண்மை முகம் இதுதான்.  உண்மையில் திமுக ஒரு கார்ப்பரேட் கிரிமினல்.  ஒரு காலத்தில் தொண்டர்களால் வளர்க்கப்பட்ட கட்சி, இன்று தேர்தல் வெற்றிக்கு தொண்டர்களை நம்பவில்லை. பல நூறு கோடி செலவு செய்து கார்ப்பரேட் உதவியுடன் தேர்தல் களத்தில் நிற்கிறது.  திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனம் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஆகும்.  திமுக கட்சி, தொண்டர்களை விட கார்ப்பரேட்களை நம்புவதன் காரணம் இதுதான்.கார்ப்பரேட் கிரிமினல்கள் கையில் ஆட்சி செல்லாமல் தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *