திடீரென ரத்து செய்யப்பட்ட ஸ்டாலினின் அவசர லண்டன் பயணம்.! ஏன் தெரியுமா.?

திமுக தலைவர் ஸ்டாலின் வருடம் தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் லண்டன் பயணம் மேற்கொள்வது வழக்கம். இவரின் லண்டன் பயண ஏற்பாடுகள் மூன்று மாதங்களுக்கு முன்பே அவரின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்ய தொடங்கி விடுவார்கள். ஸ்டாலின் லண்டன் பயணம் அவர் விமான நிலையம் வரும் வரை ரகசியமாகவே இருக்கும், அதுவரை ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் தவிர அவர்களின் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கே ஸ்டாலின் லண்டன் பயணம் தெரியாது.

விமான நிலையத்தில் விமானம் ஏறும் போது தான் வெளியே தெரியும். அவர் எதற்காக லண்டனுக்குச் செல்கிறார் என்பதை ரகசியமாக வைத்திருப்பதால், பல விடை தெரியாத விமர்சனகள் வந்த வண்ணம் உள்ளது. அதிமுக சார்பில் ஸ்டாலினின் லண்டன் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்ற அளவுக்கு கூட விமர்சனங்கள் செய்யப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் லண்டன் செல்லும் போது, இது ஒரு சாதாரண சுற்றுலா பயணம் என்றே ஸ்டாலின் தரப்பில் கூறப்படும்.

திமுக ஆட்சிக்காலத்தில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தாய்லாந்த் பயணம் மேற்கொண்ட போது, அதை வெளி உலகுக்கு கொண்டு வந்தவர் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா அவர்கள். இது அந்த கால கட்டத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஸ்டாலினின் அந்த தாய்லாந்து பயணம் அன்று முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாமல் மேற்கொண்ட பயணம் என்று கூட விமர்சனம் எழுந்தது.

இப்படி தொடர்ந்து ஸ்டாலினின் வெளிநாடு பயணம், அதனை ஒட்டிய சர்ச்சையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஸ்டாலின் தனி விமானம் மூலம் லண்டன் செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்தி காட்டு தீ போல் தமிழகம் முழுவதும் பரவியது. கொரோனா ஊரடங்கு காலத்தில் எதற்காக ஸ்டாலின் அவசரமாக லண்டன் செல்ல வேண்டும் என்றும்.

இந்த காலத்தில் சுற்றுலா கூட செல்ல முடியாது; அப்படியானால் ஏதும் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சொல்கிறாரா என சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் சர்ச்சை பெரிதாக வெடித்ததை அடுத்து திமுக தரப்பில் இருந்து ஸ்டாலின் லண்டன் பயணம் உண்மை இல்லை என விளக்கம் கொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரித்ததில் ஸ்டாலின் லண்டனுக்கு ரகசிய பயணம் மேற்கொள்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது என்றும், ஆனால் இந்த விஷயம் வெளியில் கசிந்ததை தொடர்ந்து ரகசிய பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொள்வதற்கான திட்டமிடல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முழு ஊரடங்கு காரணமாக மதுரை நகருக்குள் வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் மாவட்ட எல்லையில் நிறுத்தம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *