சமீப காலமாக திமுகவைச் சேர்ந்த 2G ஊழல் புகழ் கனிமொழி, தான் நாடார் சாதி என்பதை ஊரறிய பறை சாற்றி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈவேரா படத்தை நீக்கி விட்டு, பனை மரத்தை தனது டிவிட்டர் போட்டோவாக வைத்து தனது நாடார் பாசத்தை வெளியே கொண்டு வந்தார். இதன் மூலம் தூத்துக்குடியில் உள்ள நாடார்களின் ஓட்டுக்களை பெற்று வெற்றியும் பெற்றார். தற்போது தனது அடிப்பொடிகளை வைத்துக் கொண்டு, தான் ஒரு நாடார் என தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போஸ்டர், பிளக்ஸ் அடித்து ஒட்டி வருகிறார்.
திமுகவின் தொடக்க காலத்தில் பரிசுத்த நாடார் எனும் ஒரு நாடாரை எதிர்த்து வென்றவர் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி. தென் மாவட்டத்தில் கருணாநிதியின் அரசியல், நாடார்களை எதிர்த்துத் தான் தொடங்கிற்று. அரசியலில் பரிசுத்த நாடார், காமராஜ் நாடார், ம.பொ.சி (அப்பக்கம் நாடார்) போன்றோரை எதிர்த்து முழு நாடார் எதிர்ப்பதைத் தான் காட்டினார். காமராஜருக்கும் கருணாநிதிக்குமான பெரும் போர் உலகறிந்தது. விருதுநகரில் காமராஜரை கருணாநிதி இல்லாத பொய்களைச் சொல்லி தோற்கடித்த பொழுதுதான், ராசாத்தி அம்மையாருக்கு கனிமொழி பிறந்தார். நாடார்களை தொடர்ந்து எதிர்த்து வந்த கருணாநிதிக்கு, கல்யாணம் ஆகாத ஒரு நாடார் பெண் மூலம் குழந்தை பிறந்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
கர்மவீரர் காமராஜரை எதிர்த்து, நாகர்கோவிலில் “இது நாடாளுமன்ற தேர்தலா? நாடார் மன்ற தேர்தலா?” என முழங்கியவர் கருணாநிதி. நாகர்கோவிலில் காமராஜர் வென்றபின், தனக்கு ஏற்பட்ட அந்த தோல்வியால், அப்போது காமராஜருக்கு பக்கபலமாக இருந்த நாடார் தொழிலதிபர்களை எல்லாம் ஓட ஓட அடித்தவர் கருணாநிதி. அப்பொழுது கனிமொழிக்கு வயது 5 மட்டுமே.
அந்த கனிமொழி இப்பொழுது நாடார்கள் பலமான தூத்துக்குடியில், தானும் நாடார் வாரிசு என வந்து நிற்கின்றார். காலம் எப்படி எல்லாம் விசித்திரமாக காட்சிகளை காட்டுகின்றது. அப்போதைய காங்கிரஸில் நாடார்கள் அதிகம் உண்டு, இதனால் நாடார் இனமே திமுக விரோத இனம் என கங்கணம் கட்டி திரிந்த கருணாநிதியின் மகள் இன்று நாடார் இனத்துக்கு காவலாம். பிணம் இருக்குமிடம் குவியும் கழுகுக்கும், வோட்டு இருக்குமிடம் ஓடிவரும் திமுகவுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. திமுக சாதி ஒழிக்க வந்த புரட்சி கட்சியாம். ஆனால் கனிமொழி மட்டும் நாடார் இனமாம்; கலப்பு திருமணம் செய்தால் சாதி ஒழியும் என திமுக ஊளையிட்ட காலத்தில் பிறந்தவர் தானே இந்த கனிமொழி.
ஆனால் அவருக்கு அவரின் தாய் சாதி உண்டாம், தகப்பன் சாதி கிடையாதாம். சாதி வேண்டாம் என்றால் பெற்றோரின் இரண்டு சாதியும் வேண்டாம்; வேண்டும் என்றால் இரண்டு சாதியும் வேண்டும் அல்லவா? திமுக பெண்கள் உரிமை காக்கும் அமைப்பு, பின் ஏன் தாயின் பெயர் சேர்க்க கூடாது? தந்தைபெயர் மட்டும் ஏன்? ஆக, திமுகவின் பெண் உரிமைபடியும், தகப்பன் சாதியினை சேர்த்து, இனிமேல் “கனிமொழி கருணாநிதி ராசாத்தி இசை வேளாள நாடார்” என, இப்படித்தான் சொல்ல வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்