விருதுநகர் சட்டமன்ற தொகுதி மக்களின் மனநிலை என்ன? வெல்ல போவது யார்?

அரசியல் தமிழகம்

முன்னாள் முதல்வர் காமராஜர், தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் உட்பட பல பிரபலங்கள் பிறந்த ஊர் விருதுநகர். பருப்பு மற்றும் எண்ணெய் வணிகத்திற்கு புகழ்பெற்ற நகராக விளங்குகிறது. இங்கு விவசாய விளை பொருட்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படாவிட்டாலும், பல்வேறு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வது விருதுநகர் சந்தைதான். இங்கு இருந்து தான் மல்லி, வத்தல், சமையல் எண்ணை, பருப்பு வகைகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆனால் இங்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், நான்கு வழிச்சாலையில் மக்கள் கடக்கும் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும், புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும் என பல அடிப்படை கோரிக்கைகள் தொடர்ந்து தொகுதி மக்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் கல்வியில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது; ஆனால் இங்கு அரசு கல்லூரி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி போன்றவை இதுவரை அமைக்கப்படவில்லை. விருதுநகர் பகுதியில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வேறு மாவட்டங்களையே நாடிச்செல்கின்றனர். 1985-ம் ஆண்டு விருதுநகரை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவானபோது இனி பெரும் முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு இதுவரை ஏமாற்றமே கிடைத்துள்ளது. கடந்த 40 வருடங்களாக திமுக கூட்டணியே இங்கு அதிகமாக வென்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் தொகுதி பக்கமே வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் பெண்கள் 1.15 லட்சம் , ஆண்கள் 1.10 லட்சம் என சுமார் 2.25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை நாயக்கர், நாடார், தேவேந்திரகுல வேளாளர், முக்குலத்தோர், யாதவர்கள் அதிகம் வசிக்கின்றனர். விருதுநகர் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ARR சீனிவாசன் மீண்டும் களம் இறங்கி உள்ளார். கறுப்பர் கூட்டத்தின் மீதுள்ள வெறுப்பு, சட்டமன்ற உறுப்பினராக இவரது செயல்பாடுகள், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமை… என அனைத்துமே இவருக்கு எதிராக உள்ளன. சென்ற முறை கூட இவர் வெறும் 2870 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்று உள்ளார். வென்ற பிறகு கட்சியினருக்கு இவர் எதுவும் செய்யவில்லையாம்; அதனால் இவருக்கு மறுபடியும் சீட் கொடுக்க கூடாது என்று திமுகவினர் சென்னை வரை சென்று போராடியுள்ளனராம். கலெக்டர் அலுவலக வளாகம் அருகே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கடந்த 5 ஆண்டுகளாக செயலிழந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் கூறும் நிலை உள்ளது.

மத்தியில் உள்ள பாஜக அரசின் நாடு முழுவதும் உள்ள 117 பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களை முன்னேற்றுவதற்கான திட்டத்தின் கீழ் விருதுநகர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமானின் நேரடிப் பார்வையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாநில அமைச்சர் மாண்புமிகு KT ராஜேந்திர பாலாஜியின் ஆதரவோடும், வணிகர் சமூகமான நாடார் சமூகத்தின் ஆதரவோடும், வாக்குகளை எளிதில் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் இளம் வேட்பாளர் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இவருக்காக பிரச்சாரம் செய்தார் என்பது கூடுதல் சிறப்பு. அதிமுக – பாஜக கூட்டணி நிர்வாகிகள் இவருக்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அரசியலுக்கு இளையவர்/புதியவராக இருந்தாலும், பாஜகவை சேர்ந்த பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், அதிமுகவை சேர்ந்த மச்சராஜா, உட்பட பல மூத்த நிர்வாகிகளை முன்னிறுத்தி, அவர்களின் ஆலோசனைகளை பெற்று, சில வியூகங்களை அமைத்து செயல்பட்டுள்ளாராம்.

அமுமுக சார்பில் கோகுலம் தங்கராஜ், உட்பட மொத்தம் 18 பேர் விருதுநகர் தொகுதியில களத்தில் உள்ளனர். ஆனால் இதில் திமுக, பாஜக வேட்பாளர்கள் இருவருக்கும் இடையே மட்டுமே கடுமையான போட்டி நிலவுகிறது. விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 34 ஆயிரம் வாக்காளர்கள் மத்தியில் அவதார் செய்திகள் சார்பில் நாம் நடத்திய தொலைபேசி கருத்து கணிப்பில், 35% (சுமார் 12 ஆயிரம் ) வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பேசினர். சுமார் 24% (சுமார் 8 ஆயிரம் ) வாக்காளர்கள் திமுக ARR சீனிவாசனை ஆதரித்து பேசினர். மீதமுள்ள 41% (சுமார் 14 ஆயிரம் ) வாக்காளர்கள் மற்ற கட்சிகளான அமுமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம்… போன்ற கட்சிகளை ஆதரித்தனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சியின் வேட்பாளரே தங்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், தங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நினைவாகும் என்று பெரும்பாலான மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *