பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் – பிரதமர் மோடி பதிவுக்கு பிரபல பாலிவுட் நடிகைகள் டுவிட்டரில் ஆதரவு

அரசியல்

பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்த பிரதமர் மோடியின் மனதின் குரல் பதிவுக்கு பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனும், கரீனா கபூரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Deepika Padukone opens up about her favourite holiday destination, her  dream Hollywood project and more

மனதின் குரல் நிகழ்ச்சியில், சான் பிரான்சிஸ்கோவில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தை இயக்கிய பெண் விமானிகளை பிரதமர் மோடி பாராட்டி அவர்களுக்கு நாடு சல்யூட் செய்கிறது என குறிப்பிட்டார்.

இது குறித்து டுவிட்டர் பதிவிட்டுள்ள நடிகை கரீனா கபூர், இடைநிறுத்தம் இல்லா விமனங்களை இயக்குவது முதல், டெல்லி குடியரசு தின பேரணியில் பங்கேற்பது வரை, இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெண் விடுதலை குறித்த மகாத்மா காந்தியின் கருத்தை குறிப்பிட்டுள்ள தீபிகா படுகோன், அதை இந்திய சாதனை பெண்கள் நிரூபித்துள்ளதாக டுவிட் செய்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *