ரேனிகுண்டா பிரபலம் திடீர் மரணம்,அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்தியா சினிமா தமிழகம்

தமிழ் சினிமாவில் ரேணிகுண்டா, பில்லா2, கண்ணே கலைமானே, தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, கோலமாவு கோகிலா, உஸ்தாத் ஹோட்டல் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் சில நாட்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில்

மதுரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலமாகி உள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் திரையுலகையே அதிர்ச்சியடையும் செய்தியை வெளியிட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

Renigunta Billa 2 fame actor Theepetti Ganesan passes away due to illness

ஏற்கனவே மாற்றுத்திறனாளியான தீப்பெட்டி கணேசன் ஊரடங்கு காலத்தில் கடும் வறுமையால் பாதிக்கப்பட்டதால், தனக்கு உதவி செய்யுமாறு நடிகர் அஜித்துக்கு வேண்டுகோள் விடுத்த வீடியோவும் அண்மையில் வெளியானது அதன்பின் அஜீத்தின் மேனேஜர் இதுகுறித்து அஜித்திடம் பேசுவதாகவும் உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு நடிகர் ராகவா லாரன்ஸ், பாடலாசிரியர் சினேகன், நடிகர் சங்கத்தில் சங்கத்தின் தரப்பிலிருந்து விஷால் ஆகியோர் கணேசனுக்கு உதவி செய்ய முன்வந்தனர்

dir-seenu-twit

இருப்பினும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு கொண்டிருந்த தீப்பெட்டி கணேசன் திடீரென்று இன்று காலமானது அவருடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் தீப்பெட்டி கணேசனுக்கு பலர் தரப்பிலிருந்தும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *