பாஜகவிற்கு வாக்களித்த விவசாயிகள் – தமிழக ஊடகங்கள் மூச்

விவசாயிகள் போராட்டம் என்கிற போர்வையில் தமிழ், ஆங்கில ஊடகங்கள் இங்கே கதை விட்டுக் கொண்டிருக்கும் போதே, ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் காங்கிரஸ் அரசை மண்ணை கவ்வ வைத்து அடித்திருக்கிறது பாஜக.

வாக்கு சீட்டு தேர்தல் முறையிலும், காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. நடந்தது கிராம பஞ்சாயத்து தேர்தல், ராஜஸ்தான் பெருமளவு விவசாயத்தை நம்பியிருக்கிற ஒரு மாநிலம். ஜாட், ராஜ்புத், குஜ்ஜார் போன்ற எண்ணிக்கை பலமான, பரந்துபட்டு பல மாநிலங்களில் இருக்கும் சமூகங்கள் தான் அங்கே விவசாயத்தையே நம்பியுள்ளது.

இதிலேயே அங்கு ஆளும் காங்கிரஸ் மரண அடி வாங்கியிருக்கிறது என்று சொன்னால், விவசாயிகள் போராட்டம் என்பது எதிர்கட்சிகள் கிளப்பிய ஒரு கட்டுக்கதை என்பது குன்றின் மேல் தெரியும் வெளிச்சமாகும்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் நாட்டின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. தமிழக ஊடகங்களில் திக, திமுக, கம்யூனிஸ்டுகள் முழுக்க ஊடுருவியிருக்கிறார்கள் என்று பேசப்படுகிறது. பாஜக மற்றும் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பலை வீசுகிறது என்று மாய்மாலம் காட்டுவதிலேயே தமிழக ஊடகங்கள் உன்னிப்பாக உள்ளது. இதை வைத்துக்கொண்டே திமுகவிற்கு வெற்றி தேடி தந்து விடலாம்; அதிமுக பாஜக கூட்டணி தோற்று விடும் என்பதே அவர்களின் நம்பிக்கை.

அவர்களின் கனவு சென்ற பாராளுமன்ற தேர்தலில் ஓரளவுக்கு பலித்தது. ஆனால் இந்த முறை பாஜகவோடு கூட்டணி வைக்காத ஒரு மூன்றாவது அணி, திமுகவின் தலையிலும், அவர்களை

சார்ந்துள்ள ஊடகங்கள் வாயிலும் ஒரு பிடி மண்ணையள்ளி போடுவார்கள் என்று தமிழக பாஜகவின் IT பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணகுமார் நம்மிடம் தெரிவித்தார்.

One Zero Based Natural Farming farmer for every village stressed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *