சமீப காலமாக ஹிந்து மத உணர்வுகளையும், தேசத்தின் சமூக நம்பிக்கைகளையும் புண்படுத்தும்படியாகவும், பிரதமர் உட்பட மூத்த தலைவர்களை கேலி கிண்டல் செய்யும் விதமாக சின்னத்திரை, பெரியதிரை ஊடகங்களில் திரைக்காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மற்ற மதங்களில் இருந்து பண உதவிகள் தாராளமாக செய்யப்படுவதாக தெரிகிறது. ஹிந்து மத உணர்வுகளை கொச்சைபடுத்தி திரைக்காட்சிகள் அமைத்தால் மட்டுமே உங்களுக்கு கால்ஷீட் தரப்படும் என்று தயாரிப்பாளர்களோ அல்லது விநியோகஸ்தர்களோ, இயக்குனர் அல்லது நடிகர்களை வற்புறுத்துவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமேசான் பிரைம் என்ற வலைத் தொடரின் தயாரிப்பாளர் மீது இது போன்ற குற்ற வழக்கு உத்திர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட வலைத் தொடரான ”தாண்டவ்” தயாரிப்பாளர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. அமேசானின் அதிகாரி அபர்ணா புரோஹித், தொடர் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், தயாரிப்பாளர் ஹிமாஷு கிருஷ்ணா மெஹ்ரா, அதன் எழுத்தாளர் சோலங்கி, மற்றும் பலர் மீது, 153 ஏ (குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 395 அ (எந்தவொரு வகுப்பினதும் மத உணர்வுகளை சீற்றப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள்), பிரிவு 34 (பொதுவான நோக்கத்தை மேம்படுத்துவதற்காக பல நபர்கள் செய்த செயல்கள் ), 295 (மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலத்தைத் தீட்டுப்படுத்துதல்), 505 ( பொதுத் தவறான செயல்களைச் செய்யும் அறிக்கை), இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவுகளின் 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் மோசடி) என்று வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட போலிஸ் குழு இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், புகார் உண்மை எனக் கண்டறியப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லக்னோ துணை கமிஷனர் தெரிவித்தார். நாட்டில் உள்ள பல்வேறு இடங்களிலும் “தாண்டவ்” மீது இதே போன்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நிகழ்ச்சியில் இருந்து நீக்கக் கோரியுள்ளார். வலைத் தொடரின் சில காட்சிகள் குறித்து ஆர்ப்பாட்டங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், இது மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். எனவே ஆட்சேபனைக்குரிய பகுதிகளை அகற்றுவது பொருத்தமானது என்று கூறியுள்ளார்.
சினிமா பைனான்சியர்களுக்கு பணம் கொடுக்கும் கூட்டத்தில், அந்நிய நாட்டில் உருவான மதத்தினரே அதிகமாக அங்கம் வகிக்கின்றனர். மேலும் இது போன்று தேச துரோக செயல்களுக்கு துணை போவதால் அவர்களுக்கு வெளிநாட்டில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த சினிமா பைனான்சியர்கள், இது போல் தொடர்ந்து ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி வருகின்றனர் என்றும், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஹிந்து முன்னணி, RSS போன்ற இயக்கங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.