முதலில் நிச்சயம் , பிறகு திருமணம், அதற்கு பிறகு தான் குழந்தை பிறக்கும்.!அமைச்சர் ஜெயக்குமாரின் பதிலால் பேரவையில் சிரிப்பலை.!

குழந்தை பிறந்த பின்னர் பெயர் வைக்கலாம் என்ற அமைச்சர் டி.ஜெயக்குமாரின் பதிலால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.முன்னாள் அமைச்சர் லுார்து அம்மாள் சைமனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று விளவங்கோடு காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷகுமார் கோரிக்கை விடுத்துள்ளார், தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் மீன்வளக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற சுயநிதி கல்லுாரியில் , மாணவர்கள் ஒவ்வொரு செமஸ்டருக்கும் தலா 75 ஆயிரம் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை இருக்கிறது நடுத்தர ஏழை மாணவர்களும் படிக்கக்கூடிய அளவுக்கு அதனை அரசு கல்லுாரியாக மாற்ற வேண்டும்.

இந்த கல்லுாரிக்கு முன்னாள் அமைச்சர் லுார்தம்மாள் சைமன் பெயரை சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து பேசினார்.இதற்கு அமைச்சர் டி. ஜெயகுமார், மாணவர்களுக்கு தேவை அதிகமாக இருந்தால் கல்லுாரி ஏற்படுத்துவது குறித்து அரசு பரீசிலிக்கும். முதலில் நிச்சயம் செய்யப்பட வேண்டும் பிறகு திருமணம் நடக்கும். அதற்கு பிறகு தான் குழந்தை பிறக்கும். குழந்தை பிறந்தபின்னர் தான் பெயர் வைப்பது யோசிக்க வேண்டும் என்றார்.அமைச்சரின் இந்த பதிலால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

ஏஜென்சியை நியமனம் செய்து கட்சியை நடத்துகிறார் ஸ்டாலின்.!அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *