பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான Bata, தனது126 ஆண்டு கால வரலாற்றில், முதன்முறையாக இந்தியர் ஒருவரை குளோபல் சிஇஓ ஆக நியமித்துள்ளது.
தற்போது பாட்டா இந்தியாவின் சிஇஓ ஆக இருக்கும் 49 வயதான சந்தீப் கட்டாரியா இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி IIT பட்டதாரியான இவர், யுனிலிவர்,வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களில் 24 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
2017 ல் பாட்டா இந்தியாவின் சிஇஓ ஆக நியமிக்கப்பட்ட இவர் தற்போது பாட்டாவின் குளோபல் சிஇஓவாகியுள்ளார்.