கொரோனா பயணியை ஏற்றி வந்ததற்காக ஃபிளைதுபாய் விமானங்கள் தமிழகம் வர தடை

கொரோனா பாதித்த நபரை ஏற்றி வந்ததற்காக, ஃபிளைதுபாய் (flydubai) விமானங்கள் வரும் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு பயணிகளை ஏற்றிவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

flydubai | LinkedIn

வெளிநாட்டு விமானசேவைக்கு ஒரு மாநிலம் தடை விதிப்பது இது இந்தியாவில் முதல்முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன, கடந்த 15ஆம் தேதி சென்னையில் எடுத்த பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என வந்த நபர், ஃபிளைதுபாய் விமானம் மூலம் சென்றுள்ளார். துபாயில் அவருக்கு பரிசோதனை செய்தபோது பாசிட்டிவ் என வந்துள்ளது.

இதையடுத்து, அந்த நபர் குறித்த விவரங்களை பயணிகளுக்கான செயலியில் பதிவேற்றப்பட்டு, தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு துபாய் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறியதால், அந்த நபர், பாசிட்டிவ் ரிசல்டை மறைத்து, 2 நாட்களுக்கு முன்னர் நெகடிவ் என வந்த ரிசல்டை காட்டி ஃபிளைதுபாய் விமானம் மூலம் கடந்த 17ஆம் தேதி சென்னை வந்துள்ளார்.

96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனை செல்லும் என்பதால், அதையே இமிக்ரேசன் மற்றும் சுகாதாரத்துறை சோதனைக்கும் காட்டியுள்ளார்.

ஆனால் சுங்கத்துறை சோதனையை தவிர்ப்பதற்காக, மொபைல் போனில் இருந்த பாசிட்டிவ் ரிசல்டை ஆர்வக்கோளாறில் அந்த நபர் காட்டியபோதுதான் உண்மை தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, விசாரணை நடத்துமாறு மத்திய விமானப்போக்குவரத்து துறை தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

அதன்பேரில் மத்திய விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகளும், ஃபிளைதுபாய் நிறுவனதிடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் தரப்பில் இருந்து இதுவரை பதில் வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் வெள்ளிக்கிழமை சென்னை வர வேண்டிய விமானத்தை ஃபிளைதுபாய் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *