உலகில் உள்ள பிரதானமான 183 நாடுகளில் கடந்த ஆண்டு நோய் தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு மக்களின் வாழ்வாதாரம், மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை
திறம்பட கையாண்டதிலும் தேசத்தை இக்கட்டான சூழ்நிலையில் யார் தலைமைப் பண்பில் சிறந்த விளங்கி முன்னணியில் உள்ளனர் என்கிற கருத்து_கணிப்பு உலகநாடுகள் பலவற்றில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிடையே கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது.
அதன் முடிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது :
இதில் உலக நாடுகளின் தேசத்தில் உள்ள குடிமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்த வகையில் இந்திய மக்கள் முதல் இடத்தை பிடித்துள்ளனர். அதுபோலவே நோய் தொற்றை திறம் பட சமாளித்து மற்றைய நாடுகளிலும் உதவும் பொருட்டு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தன்னிடம் இருந்த பகிர்ந்து அளித்து, சார்க் கூட்டமைப்பின் கூட்டத்தை நடத்தி முதல் கட்டமாக சுமார் 1000 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது, என்று பலதரப்பட்ட நடவடிக்கைகள் எடுத்து உலகுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தது பாரதம் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
ஆதலால் உலக அளவில் கருத்து கணிப்பில் சுமார் 54.58%பெற்று நம்முடைய பாரதபிரதமர் மோடிஜி வரலாற்றில் முதன் முறையாக இடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ நாட்டின் அதிபர் சுமார் 27.21%புள்ளிகளுடனும் மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா பிரதமரும் வருகின்றனர், முதல் இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் உள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு என்பதே கூடுதலான தகவல்.
இதேபோன்று தனியார் கருத்து கணிப்பு நிறுவனமான மார்னிங்_கன்செல்ட் இதனை ஊர்ஜிதம் செய்து உள்ளது. அவர்கள் 13 உலக நாடுகளில் இதே போன்றதொரு கேள்விகளுடன் கருத்து கணிப்பில் ஈடுபட்டு அதிலும் சுமார் 55% வாக்குகளுடன் நமது பாரத பிரதமர் முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது போக உலக நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்திருந்த நிலையிலும் இந்திய பொருளாதார அமைப்பு வலுவுடன் இருப்பதை அது சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆகச் சிறந்த ஆளுமையின் கீழ் பாரதம் பீடு நடை போட்டு கொண்டு இருக்கிறது என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் தருணம் இது.இந்த ஆண்டு இறுதிக்குள் பாரதம் அனைத்து துறைகளில் குறைந்த பட்சம் 50% தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிட, இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்து வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு இணையாக பாரதம் உயர்ந்திட பாடுபடுவோம்.