இந்தியாவின் கலாச்சாரம் என்றால் என்ன.? திமுக எம்பி கனிமொழிக்கு பாடம் எடுத்த காயத்ரி ரகுராம்.!

இந்திய கலாசாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த முழுமையான ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய ஆய்வு நடத்துவதற்காக, ஒரு நிபுணர் குழுவை அமைத்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உத்தரவிட்டுள்ளார். 16 பேர் கொண்ட இந்த குழுவின் பட்டியலை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது, இது குறித்து கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது,இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை ? சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா ? அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா ? என சரமாரியாக மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். கனிமொழியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் பதிலடி கொடுத்து வருகின்றனர், பிரபல எழுத்தாளர் கனிமொழிக்கு பதிலளிக்கையில்,

திமுகவின் தலைவர் மற்றும் பொது செயலாளர் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு கட்சி தொடங்கியதில் இருந்து இதுவரை சிறுபான்மையினர் ஒருவருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை ? சிறுபான்மையினரோ, தலித்துகளோ, திமுக தலைமைக்கு வரக்கூடாத ? அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா ? என கனிமொழிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார், மேலும் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் இது குறித்து கூறுகையில்.

கனிமொழியின் இந்த கருத்து வேடிக்கையாக உள்ளது, திமுக இந்து கடவுள் மற்றும் இந்து தர்மத்தை நம்ப மாட்டார்கள், ஆனால் இவர்கள் எப்படி இந்து கலாச்சாரத்தை நம்பலாம்.?கடவுள் நம்பிக்கையற்ற மக்கள் கலாச்சாரமற்ற மக்களாக தான் இருக்க முடியும், கலாச்சாரத்தை பற்றி நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றால் முதலில் இந்து தர்மத்தை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என தெரிவித்த காயத்ரி ரகுராமன்.

மேலும் இந்தியா கலாச்சாரம் என்பது ஈ.வெ.ராமசாமி கூறியது போன்ற பொய்கள் அல்ல என கனிமொழிக்கு பாடம் நடத்திய காயத்ரி ரகுராம், சாதி மற்றும் மத சான்றிதல் கேட்பதை நீங்கள் நிறுத்த வேண்டும் என்றும், இதனால் நீங்கள் அரசியல் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக கனிமொழியை வெளுத்து வாங்கினார் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம்.

அப்பாவி பிள்ளைகளை உசுப்பேத்தி அவர்கள் தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம்.!மத்திய அமைச்சக ஆலோசகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *