துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திக்கொண்டுவந்த 21.74 லட்சம் மதிப்பிலான தங்கம் !..நசருல் ஹக் கைது !..

இந்தியா தமிழகம் வர்த்தகம்

சென்னைக்கு தங்கம் கடத்தப்படலாம் என்று உளவுப்பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏஐ-906 என்ற விமானத்தில் சென்னை வந்த நசருல் ஹக் (23) என்பவர் சந்தேகத்தில் பெயரில் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 523 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய நான்கு பொட்டலங்களை அவர் தமது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. சுங்கச் சட்டத்தின்கீழ் அவரிடமிருந்து ரூ. 21.74 லட்சம் மதிப்பிலான 430 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *