மார்ச் 1 முதல் யாருக்கெல்லாம் கொரோனா ஊசி? அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

இந்தியா

வரும் மார்ச் 1ம் தேதி முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயுள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு, வளர்ந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில், இந்தியா இரண்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தது. தனக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல், உலக நாடுகளுக்கும் இம்மருந்தை வழங்கி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாராட்டை பெற்று வருகிறது.

இந்தியாவில், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மார்ச் 1ம் தேதி முதல், இது மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:

மார்ச் 1ம் தேதி முதல், 60 வயதுள்ளவர்களுக்கும், இணை நோயுள்ள 45 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.

தடுப்பூசியை, 10,000 அரசு மையங்களில் அவர்களுக்கு இலவசமாக போடப்படும். 20,000- க்கும் மேற்பட்ட தனியார் தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படும்.

எனினும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட, கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *