உயர்நீதிமன்ற இடைக்கால தடை !..ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் !..

அரசியல் தமிழகம் லைப்ஸ்டைல் வரலாறு விளையாட்டு

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது.
கண்ணன் என்பவர் முதல் பரிசும், கருப்பண்ணன் என்பவர் இரண்டாவது பரிசும், சக்தி என்பவர் மூன்றாம் பரிசு பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

Alanganallur to host jallikattu on January 16

இரண்டாவது பரிசு பெற்ற கருப்பண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.அதில், இந்த ஆண்டு அலங்காநல்லூரில் 244 எனும் எண்ணில் 11 மாடுகளை பிடித்தேன். ஆனால் இறுதி முடிவுகள் அறிவிக்கையில், கண்ணன் என்பவர் முதல் பரிசு பெற்றதாகவும், நான் இரண்டாவது பரிசு பெற்றதாகவும், சக்தி என்பவர் மூன்றாம் பரிசு பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

33ஆம் எண் கொண்ட பனியனை அணிந்திருந்த கண்ணன் என்பவர் அடையாள சரிபார்ப்பு , கொரோனா சோதனை , உடற்தகுதி உட்பட எந்த சோதனைக்கு செல்லவில்லை . அவரது பெயரும் பதிவு செய்யப்படவில்லை.எண் 33 என்பது முறையாக ஹரிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமானது. அவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் சுற்றில் விளையாடி காயங்களுடன் வெளியேறினார். இந்த சூழலில் கண்ணன், அவருடைய பனியனை வாங்கி அணிந்து கொண்டு ஜல்லிக்கட்டில் விளையாடி முறைகேடு செய்துள்ளார்.

எவ்விதமான சோதனைகளையும் மேற்கொள்ளாமல் உள்ளூர் அரசியல் தலையீட்டால் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார். முறைகேடு செய்து விளையாடி அவருக்கு முதல் பரிசு வழங்கியது ஏற்கத்தக்கதல்ல. இது அதிகாரிகளின் துணையின்றி நடக்க வாய்ப்பில்லை.எனவே ஜல்லிக்கட்டின் முதல் பரிசை கண்ணன் என்பவருக்கு வழங்க தடை விதிப்பதோடு, முறையாக விசாரணை மேற்கொண்டு, உரிய தகுதி உடையவருக்கு முதல் பரிசை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜல்லிக்கட்டின் முதல் பரிசை கண்ணன் என்பவருக்கு வழங்க தடை விதிப்பதோடு, முறையாக விசாரணை மேற்கொண்டு, உரிய தகுதி உடையவருக்கு முதல் பரிசை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *