சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எத்தனை இடங்கள் ஒதிக்கீடு ..? அ.தி.மு.க தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தை

அரசியல் இந்தியா தமிழகம்

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் ஏற்கனவே அளித்திருந்தனர்.

BJP, AIADMK hold talks on electoral alliance

இந்நிலையில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது அவை :

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், துறைமுகம்

கொளத்தூர், திருவள்ளூர் (அ) திருத்தணி, ஆலந்தூர்

ஸ்ரீபெரும்புதூர், கே.வி.குப்பம், ஆத்தூர், ராசிபுரம்

பவானி, திருப்பூர், கோவை ( தெற்கு ), சூலூர்

அரவங்குறிச்சி, ராஜபாளையம், மதுரை கிழக்கு,

மதுரை வடக்கு, ஒசூர், பென்னாகரம், தென்காசி

ராமநாதபுரம், பரமகுடி , திருநெல்வேலி , நாகை , மயிலாடுதுறை

புவனகிரி, ஜெயங்கொண்டம், நாகர்கோவில், பத்மநாபபுரம்

தூத்துக்குடி, தஞ்சாவூர், பழனி, காரைக்குடி, போளூர்

மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு ஏற்கனவே 23 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *