சசிகலா வெளியே வந்தால் எடப்பாடியின் ஆட்டம் அடங்கும்

சசிகலா வெளியே வந்தால் எடப்பாடியின் ஆட்டம் அடங்கும் என்றார் ஸ்டாலின் ..
ஆனால் இப்போது ஸ்டாலினின் ரத்த ஓட்டம் நின்று விடும் போல …

Summons issued to MK Stalin in defamation cases- The New Indian Express

40 தொகுதிகளை வழங்கினால் அதில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் தோற்பதற்கு வாய்ப்பு இருப்பது உண்மைதான் ..
ஆனால் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் திமுக தேர்தலை சந்தித்தால் ஐம்பதிலிருந்து நூறு தொகுதிகள் வரை டெபாசிட் வாங்க முடியாது என்பது திமுகவுக்கும் தெரிந்த உண்மை ..

புதுவையில் 30 தொகுதிகளில் தனித்துப் போட்டி .. தமிழ்நாட்டில் காங்கிரசை கழற்றி விடுவது போன்ற வழுவல் அரசியல் எல்லாம் சும்மா உதார் வேலைகள்தான் .. எப்படியாவது காங்கிரசை 25 சீட்டுகளுக்கு அடக்கிவிட பிரசாந்த் கிஷோர் அடித்து ஆடும் பிளான் ..

இந்தப் அரசியல் சதுரங்க ஆட்டங்களை டெல்லி காங்கிரஸ் உணராமல் இல்லை ..

சசிகலாவை வரவேற்போம் என்ற கே எஸ் அழகிரியின் ஒரு பஞ்ச் வசனம் போதும்… நாளையே கையின் கால்களில் ஸ்டாலின் சரண்டர் ..

அதேநேரம் திமுக கூட்டணியை ராகுல் விரும்பவில்லை .. தன் தந்தையின் மரணத்திற்கு காரணமான விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் திமுக விடுதலைச் சிறுத்தைகள் மதிமுக தமிழீழ தமிழ் தேசிய ஆதரவு அமைப்புகள் என்றாலே ராகுலுக்கு குமட்டிக்கொண்டு வருகிறது ..

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ராகுல் புலிகள் ஆதரவாளர்களான இவர்களை தானிருந்த மேடையேற விடாமல் அவமானப்படுத்தியதை மிஷினரி இடதுசாரி ஊடகவியலாளர்கள் மறைத்தாலும் ஊர் பார்க்காமல் இல்லை..

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்த ராகுல் ஸ்டாலினை சந்திக்காமல் சென்றது அவரது பழைய பகையின் சூடு ஆறவில்லை என்பதையே காட்டியது ..

காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி விடாமல் கமலை கூட்டணிக்கு அழைப்பதும் .. சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுக ஒட்டுமொத்தமாக அவர் காலில் சரண்டர் ஆகிவிடும் என்று கார்த்திக் சிதம்பரம் திருவாய் மலர்ந்தருளுவதற்கும் ஒரு அரசியல் கூட்டல் கழித்தல் இருக்கும் என்றே நம்புகிறேன் …

தமிழக அரசியலில் நெளிவு சுளிவு தெரியாமல் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டிருக்கும் பாஜக உஷாராக வேண்டிய தருணம் இது.. இனி விரல் விட்டு எண்ணும் நாட்களே கைவசம் உள்ளன ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *