அப்பாவி மாணவர்களை பலியாக்கிறது சூர்யா போன்றவர்களின் அறிவற்ற செயல்.!வெளுத்து வாங்கிய மத்திய அமைச்சரின் ஆலோசகர்.!

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களை அச்சமடைய செய்யும் விதத்தில் அறிக்கை வெளியிட்டு வரும் நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் குடுப்பதினாருக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரின் ஊடக ஆலோசகர் அமர் பிரசாத் ரெட்டி சில புள்ளி விவரங்களுடன் தக்க பதிலடி கொடுத்துள்ளார், நீட் தேர்வை நேற்று மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினார்கள் ஆனால், நீட் தேர்வு குறித்து ஆதாரமற்ற தகவலை வெளியிட்ட சூர்யா அறிக்கைக்கு பதிலளித்துள்ள அமர் பிரசாத் ரெட்டி.

இந்தியாவில் முழுவதும் உள்ள மொத்தம் 7,95,031 மாணவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு நீட் தேர்வை எழுதினார்கள், அதில் இதர பிரிவில் 2,86,245 மாணவர்களும், ஓபிசி பிரிவில் 3,75,635, எஸ்சி பிரிவில் 99,890 மற்றும் எஸ்.டி பிரிவில் 35,272 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர் என புள்ளி விவரங்களை வெளியிட்ட அமர் பிரசாத் ரெட்டி, நடிகர் சூர்யா மற்றும் அவருடைய சகோதரர் கார்த்தி ஆகியோர் ஒரு விவகாரம் குறித்து பேசுவதற்கு முன் அதை பற்றி முழுமையாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும்.

மேலும் நீங்கள் சார்ந்த சினிமா துறையில் ஏராளமான நடிகர்கள் உள்ளனர், ஆனால் சிலருக்கு மட்டுமே நட்சத்திரம் அந்தஸ்து கிடைக்கிறது. அதற்கு காரணம் அதிர்ஷ்டம் அல்லது திறமையா.? என்றால் திறமை தான் காரணம் என உறுதியாக கூறுவேன், உங்களை போன்றவர்கள் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து நன்றாக படித்து நீட் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள தயார் செய்ய வேண்டுமே தவிர, ஏழை குழந்தைகளை தவறாக நடந்த கூடாது என அறிவுரை வழங்கிய அமர் பிரசாத் ரெட்டி.

நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக், திமுகவை சேர்ந்த கனிமொழி மற்றும் உதயநிதி போன்றோர் நீட் குறித்து பொதுமக்களின் நிலைப்பாடு என்ன என்பதை பற்றி இந்த விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என ஒரு வீடியோ பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் அமர் பிரசாத் ரெட்டி, அதில் பொதுமக்கள் நீட் தேர்வுக்கு அமோக வரவேற்பு கொடுத்து பேசியுள்ளனர், அதில் ஒரு கூலி தொழிலாளி பேசுகையில் இதற்கு முன் பணம் படைத்தவர்கள் தான் மருத்துவ படிப்புக்கான சீட் பெற்றனர்.

ஆனால் தற்போது எங்களை போன்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக அந்த வீடியோவில் கூலி தொழிலாளி பேசியுள்ளார்.மேலும் அமர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளதாவது, பொது மக்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை சிந்தியுங்கள் என்றும், நீங்கள் அப்பாவி மாணவர்களை உங்கள் அறிவற்ற செயலால் கொலை செய்து வருகிறீர்கள் என நடிகர் சூர்யா போன்றார் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் அமர் பிரசாத் ரெட்டி.

நீட் வந்தபிறகு தற்கொலைகள் குறைந்துள்ளது.! புள்ளி விவரங்களுடன் ஆதாரத்தை வெளியிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *