தமிழக வாக்காளர்களுக்கு ஆன்மீக இந்து மதக் கட்சியின் தலைவர் ஜெயம்SKகோபி நேற்று ஒரு முக்கியமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை தாண்டினால் வேறு எந்த மாநிலத்திலும் நாத்திக கும்பல் கிடையாது.
தமிழ்நாட்டை தாண்டினால் வேறு எந்த மாநிலத்திலும் இந்து கடவுள்களை செருப்பால் அடித்து இழிவுபடுத்திய நாதாரிகள் கிடையாது. தமிழ்நாட்டை தாண்டினால் வேறு எந்த மாநிலத்திலும் அரசியல்வாதிகள் இந்து பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வதை தவிர்த்து மற்ற மத பண்டிகைகளுக்கு தனியாக வாழ்த்து சொல்வதில்லை.
தமிழ்நாட்டை தாண்டினால் வேறு எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சி தலைவர்கள் இந்து மதம் சார்ந்த திருநீறு குங்கும பொட்டை அழிப்பதில்லை. இதெல்லாம் ஏன் இங்கு தமிழ்நாட்டில் மட்டும் நடக்கிறது. ?
இதற்க்கெல்லாம் காரணம் நீதான் இந்துவே. நீ மட்டும் இந்த போலி திராவிட தி.க அரசியல்வாதிகளான இவர்களை சட்டையை பிடித்து அன்று கேள்வி கேட்டு இருந்தால் இன்று இந்துமதமும் இந்துமக்களும் இவ்வளவு மனதளவில் பெரும் காயம்பட்டு இருக்க மாட்டார்கள்.
சரி போனது போகட்டும்..இனியாவது விழிப்புடன் இரு. ஏன் தி்முககாரன் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு ரம்ஜான் விழாவிற்கும், கிறிஸ்துமஸ் போகிறான் என்று யோசியுங்கள் இந்து மக்களே. நீங்கள் தெய்வத்தை வணங்குவது உண்மையானால் மனசாட்சியுடன் இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள இந்து விரோத கட்சிகளை புறக்கணியுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.