புதிய அரசியல் கட்சியை அடுத்த மாதம் தொடங்க போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், சென்னை போயஸ்கார்டனிலுள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போயஸ்கார்டனில் அவரது வீடு இருக்கும் தெரு பகுதியிலும், வீட்டின் முன்பும் 15 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
தெரு நுழைவு பகுதியில் தடுப்பு அமைத்து, அத்தெருவிலுள்ள வீடுகளின் உரிமையாளர்களின் வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதிக்கின்றனர்.
வீட்டின் முன்புள்ள நுழைவு வாயிலும் தடுப்பு அமைத்து, ரஜினியிடம் முன்அனுமதி பெற்றவர்களின் வாகனங்களை மட்டும் அனுமதிக்கின்றனர்.
இதனிடையே, கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி மற்றும் நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார்.
செயல்படாத மன்ற நிர்வாகிகள், புதிய மாவட்டச் செயலாளர்கள நியமனம் குறித்து விவாதம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.