இந்தியா – இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு

விளையாட்டு

அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்திய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

India vs England 2021 Schedule: England tour of India Full Schedule, venue,  dates - All you need to know | Hindustan Times

இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களான டொம் சிப்லி 2 ரன்களும், சாக் கிராலி 9 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். இருவரையும் அக்சர் பட்டேல் வீழ்த்தினார்.

தொடர்ந்து இங்கிலாந்து அணி வீரர்கள் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *