இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா அதிகரிப்பு புதிதாக 35,871 பேருக்கு தொற்று அச்சத்தில் மக்கள் !

இந்தியா தமிழகம்
Tamil Nadu Chennai Coronavirus August 19, 20 Highlights: State tally nears  3.5 lakh with 5709 fresh cases | Cities News,The Indian Express

இந்தியாவில் புதனன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 871ஆக அதிகரித்துள்ளது.தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது.

அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 179ஆகவும், தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 760 ஆகவும் உள்ளது. 

குஜராத்தின் அகமதாபாத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசுப் பேருந்துப் போக்குவரத்து இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்துப் பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *