இந்தியாவில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா பாதிப்பு !…

இந்தியா தமிழகம்

இந்தியாவில் நேற்றுப் புதிதாக 39 ஆயிரத்து 726 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 71 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது.

Tamil Nadu sees worst spike in Covid-19 cases, but testing at all-time high

மகாராஷ்டிரத்தில் மட்டும் புதிதாக 25 ஆயிரத்து 833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்றுவரை மூன்று கோடியே 93 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மும்பையில் கொரோனா பரவல் கடந்த ஒருவாரமாக அதிகரித்துள்ளபோதும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் தாதரில் உள்ள காய்கறிச் சந்தையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமோ என்கிற அச்சத்தில் பல நாட்களுக்குத் தேவையான பொருட்களை மக்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *