திருடி வந்த சீனா. தடுத்து நிறுத்திய மோடி – பப்புவா நியூகினியாவில் நடந்தது என்ன?

இந்தியா உலகம்

பப்புவா நியூகினி, இது ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள பிரதேசம். அருகருகே இரண்டு பெரிய தேசங்களில் இருப்பதாலோ என்னவோ தொழிற்கல்வி அபாரமாக கைவந்தது இவர்களுக்கு. 2019 ஆம் ஆண்டுகளில் பீட்டர் ஓ பிரையன் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக பொறுப்பில் இருந்தார். இது வேறு காங்கிரஸாக இருந்தாலும் கூட அங்கும் சீனாவின் வால் பிடிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தது.

சீனாவும் நமட்டு சிரிப்புடன் பிரத்யேக கவணிப்பில் வைத்திருந்தது பப்புவா நியூகினியாவை. ஆனாலும் அதன் குறுக்கு மூளை வேலை செய்ய மறக்கவில்லை. 2013-2014 ஆண்டு காலப்பகுதியில் ஒரு நல்ல மூகூர்த்த வேளையில், உள்ளே நுழைந்த சீனா – “நாங்கள் மிகப்பெரிய சர்வர்களை அமைத்து தருகிறோம். எங்கள் தேசத்தின் கணினி மென்பொருள் சார்ந்த தகவல்களை எல்லாம் சேமித்து பராமரித்து வாருங்கள், வளரும் சந்ததியினர் வளமாக வாழலாம் என்று சொன்னது”. புல்லரித்தது போல் இருந்திருக்கிறது அந்நாட்டு பிரதமருக்கு. பாவம் அவர் என்ன செய்வார், அவர் பெயரின் பின்பாதியில் இருந்து பிரையனை ஏலம் விட்டுவிட்டார் போலிருக்கிறது.

சொன்னது போலவே சர்வர்களை அமைத்தது. அதனூடாக அழகாக வேறோர் காரியத்தை செய்தது. உலகின் மற்றைய நாடுகளின் தகவல்களை தரவுகளாக இங்கு இந்த நாட்டில் வைத்து தரவிறக்கம் செய்து வந்தது. யாருக்கும் எந்த சந்தேகமே வரவில்லை. காரணம் பலருக்கும் பப்புவா நியூகினியா பற்றி பெரியதாக ஏதும் தெரிந்திருக்கவில்லை. அத்தோடு தெரிந்தவர்களுக்கு அது ஒரு கிருஸ்துவ நாடு என்பதாலும், மிகச் சிறிய அளவில் உள்ள தேசம் என்பதாலும் தமது ராணுவ பலத்திற்கு முன்னால் அது ஒன்றுமே இல்லை என்கிற நடைமுறை உளவியலாலும் பெரிதாக அதனை கண்டுக் கொள்ளவில்லை‌. இத்தனை சாதக பாதகங்களை ஆதாரமாக கொண்டு தான் சீனா பல தகிடுதத்தங்களை எளிதாக நிறைவேற்றி வந்திருக்கிறது.

மிக மிக ரகசியமான தகவல்களை தரவுகளாக இங்கு இருந்தே எடுத்து வந்து இருக்கிறது. அமெரிக்காவின் அதி உச்ச பாதுகாப்பில் இருக்கும் நபர்களின் சர்வர்களை சர்வ சாதாரணமாக படியெடுத்து இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் தயாரித்து சந்தை படுத்திய மின்னணு உபகரணங்கள் பெரும் அளவில் உதவி இருக்கிறது. கட்ட கடைசியாக இதனை இந்தியா தான் முதன் முதலில் கண்டுபிடித்தது. இந்திய பெரு நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் 5G சேவைகளை வழங்கும் பரிசோதனையில் ஈடுபட 2018 ஆம் ஆண்டே அனுமதி அளித்திருந்த சமயம் அது. சீனா உபகரணங்களை பொருத்தும் பணி முடிவடைந்து எல்லாம் தயார் நிலையில் இருந்த சமயத்தில் தான் ஏதேர்ச்சையாக மின்னணு பொறியாளர் ஒருவர் இதனை கண்டுபிடித்தார். இது பற்றி கேள்வி கேட்க அவர்களது குழுவினர் நுட்பமான இந்த தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்தனர்.

உடனடியாக களத்தில் இறங்கியது மோடி தலைமையிலான இந்திய அரசு நிர்வாகம். பொறியாளர்களை நேரிடையாக களத்தில் இறக்காமல், அதேசமயம் பெரும் படையே முனைப்புடன் செயல்பட்டது. வேரடி மண்ணேடு சல்லி சல்லியாக சல்லடை போட்டு கண்டுபிடித்தது. சீனாவினை நேரிடையாக குற்றம் சுமத்தமுடியாதபடி பக்காவாக பிளான் பண்ணி காரியத்தில் இறங்கி இருப்பதை உறுதி செய்து ஊர்ஜிதம் படுத்திக் கொண்டார்கள். ️அரசல் புரசலாக இதை கேட்ட போது, சீனா சாதுர்யமாக பதில் சொன்னது. அவர்கள் சொன்னதை இப்படி புரிந்து கொள்ளலாம் – “நீங்கள் உங்கள் போனில் புகைப்படம் ஒன்றை எடுக்கிறீர்கள். அது எடுக்கப்பட்ட இடத்தை குறிக்கும் லொகேஷனை பதிவு செய்து கொள்ளவா என்று அது கேட்கும், சரி என்றால் அந்த இடத்தின் ஜியோ கிராபிக்கல் லொகேஷனை பதிவு செய்து விடும். அல்லாமல் போனால் 0′ 0′ என்பதாக எடுத்துக் கொள்ளும். அதாவது அட்சரேகை தீர்க்க ரேகை இல்லாமல் பதிவு செய்து கொள்ளும். ஆனால் இந்த பூமி பந்தில் அட்சரேகை, தீர்க்க ரேகை 0′ 0’என்ற இலக்கம் கொண்ட ஒரு இடம் கடலில் வருகிறது. இஃது அந்த புகைப்படங்கள் எல்லாம் நடுக்கடலில் வைத்து எடுத்ததாக புரிந்து கொள்ள முடியாது அல்லவா. அதுபோலவே தான் தரவுகளின் பதிவிறக்கம் பப்புவா நியூகினியை காட்டி இருக்கலாம் என்றனர்”.

அமெரிக்கா, ஐரோப்பா என சகட்டுமேனிக்கு அனைவரது தகவல்களையும் திருடி சேகரித்து வைத்து இருக்கிறார்கள் தற்சமயம் வரை. ஆனாலும் உலக நாடுகள் கையைப் பிசைந்து கொண்டு நின்றது இது போன்றதொரு தகிடுதத்தங்களால் தான். கடந்த ஆண்டு இதற்கு முடிவுரை தங்கள் பாணியில் எழுதியது இந்திய ராஜதந்திர வட்டாரங்களில். மேலும் சீன செயலிகளை முடக்கம் என அறிவித்து விட்டு பப்புவா நியூகினியாவில் புகுந்து விளையாடி விட்டனர். திருடனுக்கு தேள் கொட்டிய கதை சீனாவிற்கு. மிச்சம் இருக்கும் சர்வர்களை திரைமறைவில் மீட்டெடுக்க பிரம்ம பிரயத்தனங்களை செய்து பார்த்தது. முற்று முழுதாக தடயமே இல்லாமல் துடைத்து வைத்திருந்தது இந்தியா யாருக்கும் தெரியாமல், யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து ஆஸ்திரேலியா போனதாக பதிவுகள் மட்டுமே சொன்னது. கடல் வழி மார்க்கம் என ஏகத்துக்கும் சல்லடை போட்டு தடவி இருக்கிறார்கள் சீனர்கள். ஒரு குண்டூசி கூட கிடைக்கவில்லை இன்றுவரை.

“இந்தியாவா இது”, என இன்று வரை நம்பவில்லை சீனர்கள். அவர்கள் மட்டும் என்ன உலகம் முழுவதும் அப்படித்தான். யாரைக்கொண்டு ???? எப்படி ???? எங்கு வைத்து இருக்கிறார்கள் என்பதை இன்றுவரை கொரானா ரகசியம் தான் உலகத்தை பொருத்தவரையில். மேலுக்கு சீனா பணிந்தது போன்ற பாவ்லா காட்டினாலும், ஊமை குத்தாய் பல இடங்களில் வைத்து அதனை பதம் பார்த்து இருக்கிறது இந்தியா. காரியம் முடிந்ததும் பப்புவா நியூகினி தனது இளம் தலைமுறையினருக்கு மேல் படிப்பிற்காக இந்திய பல்கலைக்கழகங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் அதிகார பூர்வமாக. இவற்றோடு தங்களுக்கும் தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் இருக்கிறார். சந்தோஷமாக ஒப்புக் கொண்டு இருக்கிறார் மோடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *