விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் போராட்டம்

பஞ்சாப், ஹரியானா, டில்லி பகுதியில் விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்களின் போராட்டம் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.  மோடி அரசு எவ்வளவு பணிந்து சென்றாலும் போராட்டக்காரர்கள், தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை.  ஒரு கட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகாலம் வரை ஒத்திப் போடுவதாகக் கூட மத்திய அமைச்சர் தோமர் அறிவித்தார்.  இந்த அறிவிப்பு கூட எந்த ஒரு பலனையும் தரவில்லை என்பது வேதனையான விஷயம்.

போராட்டக்காரர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல.  போராட்டத்தின் முகமாக விவசாயிகள் இருந்தாலும், இதன் பின்னணியில் இருப்பது பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் தான்.
இந்த விவசாய போராட்டங்களை இனிமேலும் தொடர அனுமதி அளிப்பது மத்திய அரசுக்கு நல்லது அல்ல.  மத்திய அரசு உறுதியான முடிவெடுக்க வேண்டும்.  போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள 12 கோடி விவசாயிகளுக்கு நலம் தர உருவாக்கப்பட்ட வேளாண் சட்டங்கள், ஒரு சில ஆயிரம் இடைத்தரகர்களின் அழுத்தம் காரணமாக நிறுத்தப்படக்கூடாது.  அதுமட்டுமல்ல இம்மாதிரி பின்வாங்குவது என்பது பல எதிர் விளைவுகளை உருவாக்கும்.  அரசு கொண்டு வரும் எந்த ஒரு சட்டத்திற்கும் எதிராக இதேபோல கூட்டங்களை கூட்டி போராட்டங்களை நடத்துவதற்கு இது ஒரு வழி கோலாக அமைந்து விடும்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை ஒரு சில ஆயிரம் மக்கள் தடுப்பதை எந்த ஒரு அரசும் அனுமதிக்கக் கூடாது.
தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்கள் எப்போதுமே கலவரத்தில் தான் முடியும் என்பதை தமிழகத்திலுள்ள ஜல்லிக்கட்டு போராட்டமும் தில்லியில் நடந்த சிஐஏ எதிர்ப்பு போராட்டமும் நமக்கு படங்களை கற்று தந்துள்ளன.
இப்பொழுதே அதிகமாக காலதாமதம் ஆகிவிட்டது.  உடனடியாக காவல்துறை மூலமும், தேவைப்பட்டால் CRPF போன்ற துணை ராணுவ அமைப்புகளின் உதவியோடு போராட்டக்காரர்களை கலைந்து செல்ல செய்ய வேண்டும்.
பலம் உள்ளவனுக்கே பூமி, புகழ் செல்வம் அனைத்தும் கிடைக்கிறது.  இந்திரா காந்தி எவ்வளவு ஊழல் செய்திருந்தாலும்; எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும்; பங்களாதேஷ் போர், அவசர நிலை பிரகடனம் ஆகியவற்றை நினைத்து, இன்னும் கூட பொதுமக்கள் இந்திராகாந்தி பலமான பிரதமர் என்று மதிக்கிறார்கள்.  எத்தனையோ மக்கள் நல திட்டங்களை நரேந்திர மோடி அரசு செயல்படுத்தி இருந்தாலும்; சர்ஜிகல் ஸ்ட்ரைக் மற்றும் ஏர் ஸ்ட்ரைக் நடத்தியதற்காகவே இந்த அரசு பலசாலியான அரசு என்று புகழப்படுகிறது.  பலமுள்ளவனையே இந்த உலகம் மதிக்கிறது.  பலகீனமானவனை உலகம் ஏளனம் செய்கிறது.  போராட்டத்தை பலத்துடன் அணுகுவோம்.  பேச்சு வார்த்தைகளுக்கு மதிப்பு தராத தனது நோக்கத்தில் இருந்து இறங்கி வராத பிடிவாதக்கார போராட்டக்காரர்களுடன் இனிமேலும் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த ஒரு பலனும் இருக்கப் போவதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *