கொரோனா சிகிச்சைக்காக உதவி செய்யும் ஆன்றோர்கள் – ஈஷா சத்குரு

இந்தியா

சீனா நாட்டில் இருந்து பரப்பப்பட்ட உயிர் கொல்லி நோயான கொரோனா, பல லட்சக் கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகிறது. உலகம் முழுவதும் இதன் கொடுமையை அனுபவித்து வரும் நேரத்தில், இதற்கான தடுப்பூசியை போட கூடாது என்று சொல்பவர்களும், இந்தியா தயாரித்த தடுப்பூசியை போட கூடாது என்று சொல்பவர்களும், இந்தியாவில் கொரோனா நோய் தொற்றை ஒழுங்காக தடுக்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டது என்றும் பல எதிர்மறை பிரச்சாரங்களை பரப்பி கொண்டு வரும் வேளையில், ஈஷா சத்குரு போன்ற பலரும் கொரோனா நோயினால் போராடும் மக்களுக்கு தொண்டு உதவிகளை செய்து, அவர்களை காத்து வருகின்றனர்.

கடந்தாண்டு கொரோனா நிவாரணப் பணிகளுக்காக சத்குரு தனது பங்களிப்பாக மட்டும் ரூ.11.54 கோடியை வழங்கினார். இந்நிதி அவரது ஓவியங்களை ஆன்லைனில் விற்பனை செய்ததன் மூலம் திரட்டப்பட்டது. மேலும், ஈஷா தன்னார்வ தொண்டர்கள் தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, கசாயம் வழங்கி அவர்களின் பசியை போக்கினர். மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம், சானிடைசர் மற்றும் PPE kit போன்ற உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கும் பணிகள் இப்போதும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

தற்போது கொரோனா இரண்டாம் சுற்று வரும் வேளையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசுக்கு அளிக்கிறோம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய #கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன்படி, கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *