ஜெகத்ரட்சன், பொன்முடி மகனை தொடர்ந்து துரைமுருகன் மகனை சுற்றி வளைக்கிறது அமலாக்க துறை.!

சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக எழுந்த புகாரின் பெயரில், அரக்கோணம் திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ஜெகத்ரட்சகனின் சொத்துகளை முடக்கி, பெமா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

அரக்கோணம் திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனை தொடர்ந்து,முன்னால் திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி சொத்துகள் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் வெளிநாட்டு பங்கு பத்திரங்களை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. வெளிநாடுகளில் 1.55 லட்சம் டாலர் அளவுக்கு பங்குகளில் அனுமதியின்றி முதலீடு செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டில் கிடைத்த ரூ.8 கோடி லாபத்தை இந்தியாவுக்கு கொண்டு வரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.8 கோடி லாபத்தை கொண்டு வராததால் அதற்கு சமமான மதிப்புள்ள கௌதம சிகாமணியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமலாக்க துறையிடம் சிக்கி வரும் நிலையில், அமலாக்க துறை அதிகாரிகளின் பார்வை திமுக பொது செயலாளர் துரைமுருகன் மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூரில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரிகளில் வருமனா வரித்துறை சோதனை நடைபெற்றது,அப்போது, அந்த பகுதி திமுக செயலாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடவுனில் இருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் கைப்பற்றப்பட்டது.இந்த பணம் துரைமுருகன் மகன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கட்டு கட்டாக மூட்டை களில் வாக்காளர்கள் பெயர் போட்டு, கவரில் போடப்பட்டு, வார்டு வாரியாக பிரித்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில்கதிர் ஆனந்த் முறையீடு செய்திருந்தார், இதனால் தற்காலிகமாக விசாரணையை வருமான வரித்துறை நிறுத்தி வைத்திருந்தனர், ஆனால் வருமான வரித்துறை கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதால், இதுகுறித்து விரைவில் விசாரணை நடைபெற்று கதிர் ஆனந்த் மற்றும் துரை முருகனுக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்க துறை முடக்கலாம் என கூறப்படுகிறது.

திமுகவை யாரும் ஆட்டி பார்க்க வேண்டியதில்லை. ஏற்கனவே அது ஆட்டம் கண்டு தான் உள்ளது.! அமைச்சர் தாக்கு.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *